/* */

துர்க்கை அம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்!

துர்க்கை அம்மன் கோயில் திருவிழா முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது

HIGHLIGHTS

துர்க்கை அம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்!
X

பட விளக்கம்: முளைப்பாரி கும்மி பாட்டு நடைபெற்ற போது எடுத்த படம்.

தென்காசி மாவட்டம் இலஞ்சி கோமதி நகர் துர்க்கை அம்மன் கோயில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

தென் மாவட்டங்களில் கிராம தேவதைகள் மற்றும் காவல் தெய்வங்கள் என பல்வேறு கோவில்கள் உள்ளன. இங்குள்ள கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் வெளியூர் வெளிமாநிலங்கள் இருந்தாலும்கூட சொந்தம் பந்தம் உறவினர்கள் அனைவரையும் காண ஒன்று கூடுவது இது போன்ற திருவிழாக்களில் மட்டுமே.

தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகளில் விடுமுறை கூட எடுக்காமல் கோவில் திருவிழாவிற்காக விடுமுறை எடுத்து குடும்பத்துடன் கிராமப்புறங்களில் உள்ள சொந்த ஊருக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய இலஞ்சி கிராமத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் திருவிழாவுக்கும் இதுபோல் ஊர் பொதுமக்கள் கூட்டமாக வந்து பங்கேற்று அம்மன் அருள் பெறுகின்றனர். துர்க்கை அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை கால் நடப்பட்டு ஒரு வாரமாக தினசரி அபிஷேகம் அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டு வந்தன.

கொடை நாளான செவ்வாய்க்கிழமை அன்று காலையில் அம்மன் விளையாடி வந்து மதியம் சிறப்பு பூஜை நடைபெற்றது.பின்னர் மாலையில் தீச்சட்டி எந்தி பூஜை, முளைப்பாரி ஊர்வலம், குற்றால தீர்த்தம் எடுத்து வருதல், இரவு சாமக்கொடையுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

ராஜபாளையம் பாலம்மாள் குழுவினர் முளைப்பாரியை செழுமையாக முறையாக வளர்த்து இருந்தனர். இதில் ஏராளமான கலந்து கொண்டனர்.

Updated On: 14 Dec 2023 8:00 AM GMT

Related News