/* */

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் இலவச பயிற்சி

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக இலவச பயிற்சி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் இலவச பயிற்சி
X

மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-தொகுதி 1 அடங்கிய துணை ஆட்சியர் உட்பட பல்வேறு வகையான 92 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை 21.07.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி ஏதேனும் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொது பிரிவினர் 21 முதல் 34 வயதிற்கு உட்பட்டவராகவும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 21 முதல் 39 வயதிற்கும் உட்பட்ட ஆண்/ பெண் / மூன்றாம் பாலினத்தைச் சார்ந்தவர்கள் 22.08.2022 க்குள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடத்திற்கான இலவச பயிற்சி வகுப்பு தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக 25.08.2022 அன்று முதல் நேரடியாக நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள் அலுவலக பணி நாட்களில் நேரடியாக வருகை புரிந்து முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு 04633-213179 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது deotenkasi22@gmail.com என்ற மின்னஞ்சல் வாயில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Aug 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?