/* */

கோரிக்கைகள் நிறைவேறாததால் விரக்தியில் தீக்குளிக்க முயன்ற முதியவர்கள்

தொடர்ந்து மனு அளித்து கோரிக்கைகள் நிறைவேறாததால் விரக்தியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற முதியவர்கள்

HIGHLIGHTS

கோரிக்கைகள் நிறைவேறாததால் விரக்தியில்  தீக்குளிக்க முயன்ற முதியவர்கள்
X

கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர்கள்

தென்காசி மாவட்டம் பூலாங்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வாவாகனி என்ற முதியவர் 10 லட்சம் ரூபாய் தோப்பு குத்தகைப் பணத்தை நாகூர்கனி என்பவர் திருப்பி தர மறுத்ததாகவும், பணத்தை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றது தெரிய வந்தது.

இதே போல் கடையநல்லூர் அருகே உள்ள சிங்கிலி பட்டி கிராமத்தை சேர்ந்த ராமையா என்ற முதியவர் இடப்பிரச்சனை தொடர்பாக தொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று கோரிக்கை மனுவோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயற்சித்தார்


அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி கோரிக்கை மனுக்களை பெற்றனர். தொடர்ந்து மனு அளித்தும் கோரிக்கைகள் நிறைவேறாததால் முதியவர்கள் அடுத்தடுத்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 29 March 2022 7:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  5. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  7. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  8. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  10. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...