/* */

தென்காசியில் பள்ளிவாசல் புதுப்பிக்க தொடுத்த வழக்கு தள்ளுபடி

தென்காசியில் அம்மன் சன்னதி தெருவில் மசூதி உள்ளது, அதை புதுப்பிக்க தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தென்காசியில் பள்ளிவாசல் புதுப்பிக்க தொடுத்த வழக்கு தள்ளுபடி
X

தென்காசியில் அம்மன் சன்னதி தெருவில், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு பாத்திய பட்டதாக கூறப்படும் இடத்தில் மசூதி உள்ளது. இந்த மசூதியை இடித்து விட்டு, இதே இடத்தில் புதிய மசூதி கட்டுவதற்கு தடையில்லா சான்று வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.

தென்காசி பஜார் ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஹாஜா முகைதீன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் , தென்காசியில் அம்மன் சன்னதி தெருவில் மசூதி உள்ளது. இந்த மசூதியை இடித்து விட்டு, இதே இடத்தில் புதிய மசூதி கட்டுவதற்கு, தடையில்லா சான்று வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட கோரி மனு வில் குறிப்பிட்டிருந்தார்.


இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், அப்போது, அதே பகுதியில் புதிதாதாக 3 இடங்கள் புதிய மசூதி கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை மனுதாரர் பார்வையிட்டு வந்து, இசைவு தெரிவித்தால் அங்கு புதிய மசூதி கட்ட அனுமதி வழங்கப்படும்.

தற்போது உள்ள இடத்தில் புதிய மசூதி கட்டினால் தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். பொது அமைதியை கருத்தில் கொண்டு இந்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தீர்ப்புக்காக வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து இருந்தார். இதை தொடர்ந்து வழக்கின் தீர்ப்பு இன்று நீதிபதி கோவிந்தராஜ் வழங்கினார். அப்போது, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Updated On: 1 May 2021 2:13 AM GMT

Related News