/* */

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம்
X

காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்களுக்கு GST, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, எரிவாயு விலை உயர்வு போன்ற மக்களை துன்பப்படுத்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்து இருந்தார்.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவருமான பழனி நாடார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மத்திய அரசு மக்கள் மீது வரியை திணிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். இதே நிலை நீடித்தால் அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டது போன்று இந்தியாவிலும் புரட்சிகள் ஏற்படும். பல கோடி மக்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். எனவே மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு வரி விதிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சட்டநாதன், சங்கை கணேசன், துணைத் தலைவர்கள் சிவராமகிருஷ்ணன், திருஞானம், பால் என்ற சண்முகவேல், வட்டாரத் தலைவர்கள் பெருமாள், மகேந்திரன், சுரண்டை நகர மன்ற தலைவர் வள்ளி முருகன், தென்காசி நகர தலைவர் காதர் மைதீன், புளியங்குடி பால்ராஜ், கடையநல்லூர் சமுத்திரம், சுந்தரபாண்டியன், சுரண்டை ஜெயபால், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ், மாவட்ட செயலாளர் சந்தோஷ் பேரூராட்சித் தலைவர்கள் முத்துவேல், சாம்பவர் வடகரை முருகன், நாகராஜன், நகர்மன்ற உறுப்பினர்கள் ரபீக் அன்சாரி, ராஜ்குமார், வேல்முத்து, சந்திரசேகர அருணகிரி, ரமேஷ், கணக்கப்பிள்ளை வலசை ரமேஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Aug 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!