/* */

குற்றால அருவியில் குளிக்க தடை! பொதுமக்கள் ஏமாற்றம்!

Courtallam Falls News-மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் சாரல் மழை காரணமாக குற்றால அருவியில் குளிக்க தடை.

HIGHLIGHTS

Courtallam Falls News
X

Courtallam Falls News

Courtallam Falls News-தென்காசி மாவட்டத்தில் தொடர் சாரல் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தளமாக விளங்கக்கூடிய குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலகட்டமாகும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில் குற்றால சீசன் துவங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக வெயில் அதிகமாக இருந்து வந்த நிலையில் இன்று மாலை நேரத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து வர தொடங்கியது.

தண்ணீர் வரத்து சீராக கொட்டி வந்த நிலையில் தொடர் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இந்த ஆண்டுக்கான சீசன் சாரல் மழையுடன் தாமதமாக துவங்கப்பட்ட நிலையிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் கரையோர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 21 March 2024 7:14 AM GMT

Related News