/* */

அம்பேத்கர் பிறந்தநாள்: பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மரியாதை

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

HIGHLIGHTS

அம்பேத்கர் பிறந்தநாள்: பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மரியாதை
X

சட்ட மாமேதை அம்பேத்கரின் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நன்னகரத்தில் அம்பேத்கர் முழு உருவச்சிலைக்கு பா.ம.க சார்பில் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நேற்று நாடு முழுவதும் அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர், அரசியல் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் அவரது உருவப் படத்திற்கும,. உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன்படி தென்காசி மாவட்டத்திலும் குற்றாலம் செல்லும் சாலை நன்னகரத்தில் உள்ள அம்பேத்கர் முழு உருவச் சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில பொது செயலாளர் வடிவேல் ராவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாள் சீதாராமன், மாநில துணைத் தலைவர் அய்யம்பெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சேது. அரிகரன், சாகுல் ஹமீது, நெல்லை மாவட்ட தலைவர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணல் அம்பேத்கர் மாலை அணிவித்து அவரின் கொள்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து புங்கை, வாகை உள்ளிட்ட மரங்கள் நடப்பட்டது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூறியதாவது :ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய விடுதலை போராளி அண்ணல் அம்பேத்கரின் புகழை போற்றும் விதமாக அவரது பிறந்த நாளன்று அவரது உருவச்சிலைக்கு பா.ம.க சார்பில் மரியாதை செலுத்துவதோடு மட்டுமல்லாமல்அவரது நினைவு நாளில் அவரது கொள்கைகளை மக்களிடையே எடுத்து கூறியும் வருகிறது. தமிழகத்தில் ஒரே நாளில் 7 சிலைகளை நிறுவியது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் மருத்துவர் அய்யா . அதே போல் தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அம்பேத் கரின் சிலைகளை நிறுவி அவரது கொள்கைகளை நிறைவேற்ற பாடுபடுகின்ற ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி.

அம்பேத்கரையும், அவரது சிந்தனைகளையும் மக்களிடையே எடுத்து செல்வதற்கு எங்களை சிறப்பாக வழி நடத்தி வருகிறார் மருத்துர் அய்யா. அவரது கொள்கைகளை செயல்படுத்தும் தலைவரான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், நடுவண் அரசின், மருத்துவ துறையில் பட்ட மேற்படிப்புக்கு, 70 ஆண்டுகளுக்கு பிறகு இட ஒதுக்கீடு பெற்று தந்து சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் அம்பேத்கரின் கொள்கைகளை மக்களிடையே எடுத்து செல்ல பா.ம.க தொடர்ந்து பாடுபடும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணன், சதீஷ், , மாவட்ட துணைத் தலைவர் மகாதேவன், ஒன்றிய தலைவர்கள் செண்பக குமார், பாலகிருஷ்ணன். ஒன்றிய செயலாளர்கள் சண்முகவேல், கருப்பசாமி, சண்முகசுந்தரம், சிவன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 April 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...