/* */

தென்காசி வட்டார நூலகத்தில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா: மாணவர்களுக்கு பரிசளிப்பு

தென்காசி வட்டார நூலகத்தில் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த பாேட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்.

HIGHLIGHTS

தென்காசி வட்டார நூலகத்தில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா: மாணவர்களுக்கு பரிசளிப்பு
X

தென்காசி வட்டார நூலகத்தில் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த பாேட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை, தென்காசி வ.உ.சி வட்டார நூலகம், ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் மற்றும் வெற்றி IAS அகாடமி இணைந்து டாக்டர் அப்துல் கலாம் 89வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்புரையாற்றினார். தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் டாக்டர்.சுடலை, குற்றாலம் ரோட்டரி சங்க தலைவர் பிரகாஷ், ரோட்டரி சங்க செயலாளர் கார்த்திக்குமார் ஆகியோர் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் எலைட் தலைவர் ஜெகமோகன், மாரிமுத்து, ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சக்தி தலைவர் கிருஷ்ணவேணி, நிர்வாகி முத்துலெட்சுமி, அரசு அலுவலர் ஒன்றிய தென்காசி மாவட்ட செயலாளர் சுப்ரமணியம், வட்டார கல்வி அலுவலர் இளமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிளை நூலகர் சுந்தர் அனைவருக்கும் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஜூலியாராஜசெல்வி, நிஹ்மத்துன்னிஸா, ராஜேஸ்வரி, வாசகர் வட்ட நிர்வாகிகள் குழந்தையேசு, சலிம், முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

இப்போட்டிகளில் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் வைத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. கட்டுரைப்போட்டியில் ஊராட்சி ஒன்றிய பள்ளி திருச்சிற்றம்பலம் மாணவி க.கீதா முதல் பரிசும், காட்டுபாவா நடுநிலைப்பள்ளி மாணவி மஹ்மூதா மஜ்மி இரண்டாம் பரிசும், அஸ்வினி பாலா, ஸ்ரீ சிவசைலநாத நடுநிலைப்பள்ளி மாணவி பாலஹரினி ஆகியோர் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

ஓவியப்போட்டியில் தங்கப்பழம்பள்ளி வாசுதேவநல்லூர் மாணவி செரின் முதல் பரிசும், புனிதமிக்கேல் பெண்கள் பள்ளி மாணவி கலைமதி இரண்டாம் பரிசும், பி.வி.எம். மேல்நிலைப்பள்ளி மாணவர் சுந்தர் ராஜன் மூன்றாம் பரிசும் பெற்றனர். பேச்சுப்போட்டியில் பராசக்தி வித்யாலயா பள்ளி மாணவி நிவ்யா முதல் பரிசும், ஸ்ரீ சிவசைலநாத நடுநிலைப்பள்ளி மாணவி பாலமுகனா இரண்டாம் பரிசும், அரசு தொடக்கப்பள்ளி அச்சன்புதூர் மாணவி ஆசிகா மூன்றாம் பரிசும் பெற்றனர். கவிதைப்போட்டியில் கல்வியல் கல்லூரி மாணவி மேக்டலின் பிரபா முதல் பரிசு பெற்றனர்.

Updated On: 18 Oct 2021 2:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்