/* */

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஆயிரப்பேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்!

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஆயிரபேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஆயிரப்பேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்!
X

பட விளக்கம் : ஆயிரபேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

தமிழக முழுவதும் உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில்தென்காசி மாவட்டத்தில் நேற்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தார். மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதய கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் ஊராட்சி வளர்ச்சி சம்பந்தமாக நடைபெற்று வரும் அக்கப்பூர்வமான பணிகள் மேலும் ஊராட்சிக்கு தேவையான பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது கூட்டத்தில் ஆயிரபேரி ஊராட்சிக்கு உட்பட்ட அங்கராயன் குளம் பகுதியில் போதிய பேருந்து வசதிகள் இல்லை. பேருந்து வசதி வேண்டும் மேலும் மினி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதே தொடர்ந்து பேசிய மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன் தென்காசி போக்குவரத்து பணிமனை மேலாளரிடம் தொலைபேசி தொடர்பு கொண்டேன். அவ்வழியாக செல்லும் நகரப் பேரூந்து குறித்த தகவல்கள் அளியுங்கள். அந்த பேருந்துகளை நீங்கள் கூறிய இந்த கிராம புற பகுதியில் நின்று செல்ல ஏற்பாடு செய்கின்றேன் என்று கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து குடிநீர் பிரச்சினை தொடர்பான விவாதத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி பொது இடங்களில் தாமிரபரணி கூட்டுத்தின் கீழ் பொது நல்லி அமைத்து தர ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பேசிய அதிகாரிகள் இப்பகுதியில் வளர்ப்பு பிராணிகள் அதிகம் உள்ளதால் விரைவில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் முகாம் ஒன்று ஏற்பாடு செய்ய உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

அதே தொடர்ந்து பேசிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான ஏற்படும் இன்னல்கள், அதற்கான தீர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற செயலாளர் சங்கர சுப்பிரமணியன், மூர்த்தி உட்பட பொதுமக்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Nov 2023 8:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...