/* */

கடலையூரில் புதிய காவல்நிலையம் அமைக்க வலியுறுத்தி தமாகாவினர் நூதன போராட்டம்

கடலையூரை தலைமையிடமாக கொண்டு காவல்நிலையம் அமைக்க வலியுறுத்தி தமாகா கட்சியினர் தேங்காய் உடைத்து நூதன போராட்டம்.

HIGHLIGHTS

கடலையூரில் புதிய காவல்நிலையம் அமைக்க வலியுறுத்தி தமாகாவினர் நூதன போராட்டம்
X

கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லியம்மன் கோவில் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லியம்மன் கோவில் முன்பு கடலையூரை தலைமையிடமாக கொண்டு காவல் நிலையம் அமைக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட காவல் பகுதியில் அமைந்துள்ள நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதாக அமைந்துள்ள பூசாரிபட்டி, லிங்கம்பட்டி, கடலையூர் உள்ளிட்ட 30 கிராமங்கள் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கிராமங்கள் நாலட்டின்புதூர் காவல் நிலைய கட்டுப்பாட்டில் வருகிறது. விபத்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்த இடத்திற்கு போலீசார் விரைந்து வருவதற்கு காலதாமதம் ஆகிறது.

மேலும் அப்பகுதி மக்கள் இரண்டு காவல் நிலைய எல்லை பகுதிகளை கடந்து நாலாட்டின்புத்தூர் காவல் நிலையம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் போலீஸ் தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் பூசாரிபட்டி உள்ளிட்ட 30 கிராமங்களை பிரித்து கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரை தலைமையிடமாகக் கொண்டு காவல் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுக்கபட்டதை அடுத்து கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு 20 க்கும் மேற்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தேங்காயில் சூடம் ஏற்றி உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் வட்டாரத் தலைவர் ஆழ்வார் சாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் கனி, மாவட்ட விவசாய அணி தலைவர் தலைவாய் சாமி, மாவட்ட செயற்குழு திருமுருகன், மாவட்ட தலைவர் முத்துச்சாமி, நகர துணைத்தலைவர் ராஜமாணிக்கம், செண்பகராஜ், விக்னேஷ் ராஜா, நகரச் செயலாளர் மூர்த்தி, சரவணன், வின்சென்ட், நகர துணைச் செயலாளர் ஜான் கென்னடி, வட்டார துணைத்தலைவர் செந்தூர் பாண்டியன், மாரிமுத்து, வைரம், காளிராஜ், இளைஞரணி மாவட்ட செயலாளர் பொன்ராஜ், உள்ளிட்டோர் தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 29 Jan 2022 1:00 PM GMT

Related News