/* */

டீக்கடையில் முதல்வர் போஸ் காெடுக்கவா மக்கள் வாக்களித்தார்கள்: கடம்பூர் ராஜூ கேள்வி

முதல்வர் டீக்கடையில் டீ குடித்தேன் என்று போஸ் கொடுப்பதற்காக வா மக்கள் வாக்களித்தார்கள். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி

HIGHLIGHTS

டீக்கடையில் முதல்வர் போஸ் காெடுக்கவா மக்கள் வாக்களித்தார்கள்: கடம்பூர் ராஜூ கேள்வி
X

காேவில்பட்டியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழக முதல்வர் டீக்கடை சென்று டீ குடித்தேன் என்று போஸ் கொடுப்பதற்காக வா தமிழக மக்கள் வாக்களித்தார்கள் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கேள்வி.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 26வது வார்டு அதிமுக வேட்பாளர் வள்ளியம்மாள், 10வது வார்டு அதிமுக வேட்பாளர் மாரீஸ்வரி, 25வது வார்டு அதிமுக வேட்பாளர் பொம்மி முருகன், 36வது வார்டு அதிமுக வேட்பாளர் அலெக்ஸாண்டர் ஜார்ஜ், 24வது வார்டு அதிமுக வேட்பாளர் செண்பகமூர்த்தி, 23வது வார்டு அதிமுக வேட்பாளர் செண்பகவள்ளி, 22வது வார்டு அதிமுக வேட்பாளர் கமலா ரவிச்சந்திரன், ஆகியோரை ஆதரித்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பிரச்சாரம் மேற்கொண்டு வீதி வீதியாக சென்று பத்தாண்டு கால சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

பிரச்சாரத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஒன்றிய குழு தலைவி சத்யா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன்,வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமான், வழக்கறிஞர் பழனிகுமார், தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் ராஜகோபால், தமிழ் மாநில காங்கிரஸ் நகர செயலாளர் மூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அதிமுக நிர்வாகிகள் கோபி, முருகன், பழனிகுமார், குழந்தைராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில் :- தேர்தல் வாக்குறுதிகளை எதுவுமே நிறைவேற்றாமல் மக்களுக்கு நாமம் போட்டவர்கள் தான் திமுகவினர். ஸ்டாலின் தான் வரரு விடியல் தர போறாரு எனக் கூறினார்கள் ஆனால் இதுவரைக்கும் விடியவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஸ்டாலின் சைக்கிளில் போனார், ஸ்டாலின் டீக்கடையில் டீ குடித்தார் என போட்டோ எடுத்து போட்டு போட்டோ எடுத்து போடுவதற்கு தான் தமிழக மக்கள் ஓட்டு போட்டு முதல்வராக கொண்டு வந்தார்கள் என முன்னாள் முதல்வர் எடப்பாடியார் சரியான கேள்வி கேட்டார். மக்கள் திட்டங்களை தான் நிறைவேற்ற வேண்டும் சினிமாவில் நடிப்பது போல் போஸ் கொடுக்க வேண்டியதில்லை என கேள்வி எழுப்பினார்‌.

தழக முதல்வர் டீக்கடை சென்று டீ குடித்தேன் என்று போஸ் கொடுப்பதற்காக வா தமிழக மக்கள் வாக்களித்தார்கள் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்க முடியாததால் தான் காணொளி மூலமாக மக்களை சந்தி வாக்கு சேகரிக்கிறார் என்று அவர் பேசினார்.

Updated On: 17 Feb 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்