நான்கு கிராமங்களுக்கு கண்காணிப்பு குழு கூட்டம்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நான்கு கிராமங்களுக்கு கண்காணிப்பு குழு கூட்டம்
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குருவன்கோட்டை மாயமான் குறிச்சி குறிப்பன்குளம் கீழ பட்டமுடையார்புரம் ஆகிய கிராமங்களுக்கான கிராம கண்காணிப்புக் குழுக் கூட்டம் குருவன்கோட்டை கிராமத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஆலங்குளம் காவல்நிலைய ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னிவளவன் முன்னிலை வகித்தார். உதவி ஆய்வாளர் பாரத்லிங்கம் வரவேற்றார். தொடர்ந்து பத்தாம்வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசு வழங்கினார். தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற குறிப்பன்குளத்தை சேர்ந்த மாணவி சாரதாவை பாராட்டி பரிசு வழங்கினார் . தன்னார்வலர்கள் கிராம கண்காணிப்பு குழுவிற்கு டீ சர்ட் வழங்கப்பட்டது. துப்புரவு பணியாளர்கள் முதியோர்களுக்கு சேலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் சுகாதாரதுறை மேற்பார்வையாளர் ஹரிஹரசுதன், உதவி ஆய்வாளர்கள் பலவேசம் சுப்பிரமணியன் பரமசிவன், தலைமை காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சமூகஆர்வலர் முருகன் மற்றும் குருவன்கோட்டை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Updated On: 29 Jan 2021 5:15 AM GMT

Related News