/* */

சிவகங்கையில் நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார் ஆட்சியர்

சிவகங்கையில் பயனாளிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

HIGHLIGHTS

சிவகங்கையில் நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார் ஆட்சியர்
X

நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு தள்ளுபடி சான்றிதழ்கள் மற்றும் நகைகளை உரிய பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர்ப.மதுசூதன் ரெட்டி, வழங்கினார்.

நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர், தெரிவிக்கையில்

தமிழக அரசின் உத்தரவின்படி, கூட்டுறவு நிறுவனங்களில் வங்கிக்கடன் உதவி பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்கள் மற்றும் உரிய நகைகள் பயனாளிகளிடம் வழங்கப்பட்டு வருகிறது.

தகுதியான பயனாளிகளை கண்டறிவதற்கு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அந்த வழிகாட்டுதலின்படி, தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திட தமிழக அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டு களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நமது மாவட்டத்திற்கும், நமது மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிற மாவட்டங்களுக்கும் சென்று தகுதியான பயனாளியை கண்டறியவதற்காக சிறப்பு களஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில், நமது மாவட்டத்தில் உள்ள 166 கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் நகைக்குட்பட்டு நகைக்கடன் பெற்ற 23,599 நபர்களுக்கு ரூ.92.74 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய சான்றிதழ்களும், நகைகளும் உரியவர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படாது இருந்தால், அவர்கள் அந்த கூட்டுறவு நிறுவனத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

தமிழக அரசின் சார்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

நிகழ்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜீனு, துணைப்பதிவாளர்கள் ஆர்.வெங்கடலெட்சுமி, பு.குழந்தைவேல், இரா.தொல்காப்பியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 March 2022 11:55 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!