/* */

தமிழக முதலமைச்சரின் துரிதமான நடவடிக்கைகளால் வெள்ளப் பேரழிவு தவிர்க்கப்பட்டது

கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறை சரி செய்ய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு ஒரு கூடுதல் சுமையாகவே உள்ளது

HIGHLIGHTS

தமிழக முதலமைச்சரின் துரிதமான நடவடிக்கைகளால்  வெள்ளப் பேரழிவு தவிர்க்கப்பட்டது
X

உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்

முதல்வரின் துரிதமான நடவடிக்கைகளால் பேரழிவு தவிர்க்கப்பட்டதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், பாகனேரியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு போல், தற்போது பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு முதலமைச்சரின் துரித நடவடிக்கையும், நிர்வாகத் திறமையும் தான் காரணம்.

கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறை சரி செய்ய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு ஒரு கூடுதல் சுமையாகவே உள்ளது. தமிழக முதலமைச்சர் நிச்சயமாக அதனையும் விரைவில் சீரமைப்பார். வெள்ளச் சேதங்களை சீரமைக்கும் பணிகளால் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போவதற்கு வாய்ப்பில்லை. வெள்ள சேதங்களையும் சீரமைக்கும் அதே வேளையில், நீதிமன்ற உத்தரவுபடி குறிப்பிட்ட கால அவகாசத்தில் உள்ளாட்சித் தேர்தலையும் நடத்த வேண்டும். தென் தமிழகத்தில் தேவையான அளவுதான் மழை பெய்துள்ளது. அதனால் சேதங்கள் அதிகம் இல்லை. மழை பெய்து சேதம் ஏற்பட்டால் , உள்ளூர் அமைச்சர்கள் அதிகாரிகள் மூலம் உடனடியாக சரிசெய்யப்படும் என்றார் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்.

Updated On: 11 Nov 2021 10:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!