மது பாராக மாறிய சிவகங்கை பேருந்து நிலையம்: நோய் பரவும் அபாயம்.!

மது பாராக மாறி வரும் சிவகங்கை பேருந்து நிலையம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மது பாராக மாறிய சிவகங்கை பேருந்து நிலையம்: நோய் பரவும் அபாயம்.!
X

சிவகங்கை மையப்பகுதியில் அமைந்துள்ளது சிவகங்கை பேருந்து நிலையம். இங்கு மதுரை, தொண்டி, திருப்பத்தூர், ராமேஸ்வரம், திருச்சி என பல்வேறு இடங்களுக்கு செல்லக்கூடிய பேருந்து நிற்கும் இடத்திலும், மேலும் பொதுமக்கள் அதிகமாக இருக்கக்கூடிய பேருந்து நிலையம் பின்புறத்தில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

இதனால் மதுபான கடைக்கு வரும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மதுபாட்டில்கள் வாங்கிக்கொண்டு பேருந்து நிலையத்திற்குச் செல்லும் கிழக்கு நுழைவாயில் பகுதிகளில் மது பிரியர்கள் அங்கேயே மது அருந்திவிட்டு பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் அனைத்தையும் போட்டு செல்வதால் பயணிகள் உள்ளே வரும்போது துர்நாற்றமும் அச்சமும் ஏற்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனே இந்த பகுதிகளில் மது அருந்துவதற்கு தடைவிதித்து இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

Updated On: 8 May 2021 11:46 AM GMT

Related News