/* */

முறைகேடாக பத்திரம் பதிந்து பட்டா மாற்றிய அதிகாரி மீது நடவடிக்கை கோரி போராட்டம்

மோசடியாக பத்திரப்பதிவு செய்து பட்டா மாறுதல் செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் போராட்டம்

HIGHLIGHTS

முறைகேடாக பத்திரம் பதிந்து பட்டா மாற்றிய   அதிகாரி மீது நடவடிக்கை கோரி போராட்டம்
X

சிலகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

மோசடியாக பத்திர பதிவு செய்து பட்டா மாறுதல் செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிகாரியின் காலில் விழுந்து ஆதிதிராவிட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை பகுதியில் இடம் இல்லாமல் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு உதவி செய்ய நினைத்த நடிகர்திலகம் சிவாஜிகணேசன், கடந்த 1965 -ம் ஆண்டு காரைக்குடியில் தேன்கூடு என்ற நாடகம் நடத்தி அதன் மூலம் கிடைத்த வருமானத்தின் மூலம், ஏ.வி.எம் மெய்யப்பசெட்டியாரிடம் இருந்த சுமார் இரண்டரை ஏக்கர் இடத்தை வாங்கி அதை தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

2012 ல் சிவாஜி கணேசன் நலச் சங்கத்திற்கு பாத்தியப்பட்டது என மாவட்ட வருவாய் அலுவலர் விசாரனை நடத்தி 2013 ல் பட்டா வழங்கப்பட்டதாம். இதையடுத்து தங்கள் நலசங்கத்திற்கு வழங்கப்பட்ட இடத்தை அதிகாரிகளின் துணையுடன் சிலர் மோசடியாக பத்திர பதிவு செய்து பட்டா மாறுதல் செய்துள்ளதாக பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதைத்தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்தும் சிவாஜி கணேசன் தானமாக வழங்கிய இடத்தை மீட்டு தர வலியுறுத்தியும் நடைபெற உள்ள 31வது வார்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து கருப்புக்கொடி கட்டி பள்ளிக்குழந்தைகளுடன் ஆதிதிராவிட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தை நடத்த வராததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வந்தனர். ஆட்சியர் இல்லாததால் சிவகங்கை டிஆர்ஓ மணிவண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மோசடியாக பத்திர பதிவு செய்து பட்டா மாறுதல் செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 18 Feb 2022 9:18 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  2. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  5. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  7. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  9. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  10. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...