/* */

பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா முலம் நேரடியாக கண்காணிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா முலம் நேரடியாக கண்காணிப்பு செய்யப்பட உள்ளது.

HIGHLIGHTS

பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா முலம் நேரடியாக கண்காணிப்பு
X

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு பதற்றமான வாக்குச்சாவடியை கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாளை 19ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மாவட்டத்தில் 4 நகராட்சிகள் , 11 பேரூராட்சிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகின்றன . அதனையொட்டி , வட்டார தேர்தல் அலுவலர்கள் அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து , வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான உபகரணங்கள் ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கும் படிவங்கள் , சீல் , மை உட்பட 13 வகைப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன .

இவற்றுடன் பொது சுகாதாரத்துறையின் முலம் கொரோனா நோய்த்தொற்று தடுப்பிற்கான முகக்கவசம் , கிருமிநாசினி மருந்துகள் உட்பட 5 வகைப் பொருட்கள் இவற்றுடன் சேர்த்து அனுப்பப்படுகிறது . இவ்வாறு செல்லும் பொருட்கள் சரியாக உள்ளதா என மாவட்டத்தில் உள்ள வாக்கு மையங்களில் நடைபெறும் இடத்திற்குச் சென்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட வேண்டிய வாக்கு எந்திரங்கள் மற்றும் கொரோனா தடுப்புக்கான பொருட்கள் அனைத்துமே பிரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதோடு உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. பதற்றமான 56 வாக்குச்சாவடிகளில் லைவ் வெப்ஸ்ட்ரீமிங் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

மாவட்டத்திலுள்ள 785 வார்டுகளில் 275 தேர்தலில் நடக்கப்போகிறது 9-வார்டுகளில் போட்டி இன்றி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒரு வாக்கு சாவடியில் வேட்பாளர் மனுவை திரும்ப பெற்றதால் அங்கும் வேட்பாளர் போட்டிஇன்றி வெற்றி பெற்றார். இதில் மாவட்டத்தில் 275 வார்டுகளில் தேர்தல் நடைபெறும் 6,158 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

4 வாக்கு என்னும் மையம் உள்ளது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களும் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப் படும். வாக்காளர்கள் வாக்கு செலுத்த வரும் பொழுது அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் லைவ் வெப் ஸ்ட்ரிமிங் முலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Updated On: 18 Feb 2022 4:23 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!