/* */

சிவகங்கையிலிருந்து சென்னைக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்த ஆட்சியர்

பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொதுமக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் தற்சமயம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

சிவகங்கையிலிருந்து  சென்னைக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்த ஆட்சியர்
X

மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சார்ந்த பொதுமக்களுக்கு சிவகங்கையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் 

மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சார்ந்த பொதுமக்களுக்கு, ரூ.42.36 இலட்சம் மதிப்பீட்டிலான நிவாரணப் பொருட்களை 4 கனரக வாகனங்கள் மூலம் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் அனுப்பி வைத்தார்:

மிக்ஜாம் புயலினால் கடந்த வாரம் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள சில மாவட்டங்களை சார்ந்த பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்படி போர்க்கால அடிப்படையில் அனைத்து சீரமைப்பு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, மேற்கண்ட பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

மேலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை சீர் செய்வதற்கு, அரசுடன் இணைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களது பங்களிப்பினை ஏற்படுத்திட, தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொதுமக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் தற்சமயம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பொதுமக்கள், வர்த்தக சங்கங்கள், தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் ஆகியோர்களின் பங்களிப்புடன், இன்றைய தினம் (09.12.2023) 4 கனரக வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு வகைகள், ஆடைகள், போர்வைகள், மருந்து வகைகள் உட்பட பல்வேறு வகையான நிவாரணப் பொருட்களை, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு, வருவாய் துறையின் சார்பில் ரூ.27.23 இலட்சம் மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.10.13 இலட்சம் மதிப்பீட்டிலும் என, ரூ.37.36 இலட்சம் மதிப்பீட்டிலான நிவாரணப் பொருட்கள் இன்றைய தினம் சிவகங்கை மாவட்டத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, கூட்டுறவுத் துறையின் சார்பில் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆகியோர்களின் பங்களிப்புடன் சுமார் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டிலான நிவாரணப் பொருட்களும் இன்றையதினம் அனுப்பி வைக்கப் படவுள்ளது. இதுபோன்று, அரசுடன் இணைந்து நிவாரணப் பணிகளை, மேற்கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச்சந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன், மாவட்ட அலுவலக மேலாளர் (வளர்ச்சி) எஸ்.திருப்பதிராஜன், வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) யாஸ்மின் சகர்பான் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Dec 2023 3:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!