/* */

சேலம் - வீடுவீடாக சென்று நோய் தடுப்புப்பணி செய்ய 2100 பேர் நியமனம்

சேலம் மாநகரில், வீடுவீடாக சென்று நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள, 2100 களப்பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, 700 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் மூலம் வீடு வீடாக சென்று நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பணியை துரிதப்படுத்த, 100 வீட்டுக்கு 1 களப்பணியாளர் நியமிக்கும் வகையில், கூடுதலாக 1000 களப்பணியாளர்கள் நியமிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேர்காணல் இன்று நடைபெறுகிறது. சேலம் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி பகுதியில் 4 மையங்களில் நடைபெற்ற நேர்காணலில் திரளான இளைஞர்கள் சான்றிதழ்களுடன் பங்கேற்றனர். அதன்படி, 3 மாதத்திற்கு தற்காலிகமாக நியமனம் செய்யப்பட உள்ள களப்பணியாளர்களுக்கு, ஒருநாள் ஊக்கத்தொகையாக ரூ. 319 ஐ மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயித்துள்ளது.

வீடு வீடாக வரும் களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி உண்மை தகவலை வெளிப்படையாக தெரிவிக்க, சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநகரில் ஓரிரு நாளில் 2100 களப்பணியாளர்களும் முழுமையாக நியமிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Jun 2021 5:08 AM GMT

Related News