/* */

சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 48 இடங்களில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்
X

சேலம் மாநகராட்சி சிறப்பு முகாம் (பைல் படம்).

சேலம் மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை அண்ணா நகர், மெய்யனூர் அர்த்தனாரி கவுண்டர் தெரு, சொட்டையன் தெரு, பெருமாள் கோவில் தெரு, மோளப்பட்டியான் வட்டம், சின்னக்கொல்லப்பட்டி சட்டக்கல்லூரி இந்திரா நகர் 9வது கிராஸ், அண்ணா பூங்கா பின்புறம் சங்கர் நகர், சோமு தெரு, பாலமுருகன் தெரு, ஜாமியா மஜித், பாரதியார் தெரு, நந்தனார் தெரு,ராமலிங்கம் மாதர் தெரு, எஸ்.ஆர்.எம். நகர், வள்ளுவர் நகர், மேட்டு தெரு ஆகிய பகுதிகளிலும், பிற்பகல் 12 முதல் 2 மணி வரை அழகாபுரம் ஆண்டாள் தெரு திருமால் நகர், ஆசாத் நகர், அம்மன் நகர், ஜவஹர் மில் பின்புறம், பி.ஆர்.பி.நகர்,குருக்கள் காலனி சிவநாயக அப்பார்ட்மெண்ட் அருகில், மாரியம்மன் கோவில் தெரு சீரங்கபாளையம், சாய்பாபா தெரு, அண்ணா நகர் 4வது கிராஸ், சத்தியமூர்த்தி நகர், சித்தி விநாயகர் தெரு, ஆறுமுகம் நகர், அம்பலவாண சுவாமி கோவில் தெரு, கெட்டுக்காடு, கருங்கல்பட்டி 4வது கிராஸ், பெருமாள் கோவில் மேடு ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

மேலும், நண்பகல் 3 மணி முதல் 5 மணி வரை எட்டிக்குட்டை தெரு, லட்சுமி நகர், டி.எம்.ரோடு, முல்லாக்காடு, வீரபாண்டியார் நகர், மணக்காடு, கோவிந்தக்கவுண்டர் தோட்டம், குண்டு போடும் தெரு, தில்லை நகர், ராஜா பிள்ளை லைன், கிருஷ்ணா புதூர் பண்டிரநாதர் தெரு, அண்ணா நகர் மற்றும் அழகு நகர், மார்க்கெட் தெரு, கொண்டலாம்பட்டி நடுத்தெரு, சபாபதி காடு களரம்பட்டி மெயின்ரோடு, சீலநாயக்கன்பட்டி ஊத்துக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என 48 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.


Updated On: 14 Aug 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!