/* */

சேலத்தில் அவலம் - ஆக்சிஜன் படுக்கையின்றி தரையில் சிகிச்சை பெறும் நோயாளிகள்

சேலம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதால், கொரோனா நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சேலத்தில் அவலம் - ஆக்சிஜன் படுக்கையின்றி தரையில் சிகிச்சை பெறும் நோயாளிகள்
X

சேலம் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதால், தரையில் படுக்கை வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்வதால், பெரும்பாலான நோயாளிகள் அரசு மருத்துவமனை நோக்கியே படையெடுக்கின்றனர்.

இதனால், சேலம் அரசு மருத்துவமனையில் ஒரு படுக்கைக்கு இரண்டு, மூன்று நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்படியும் படுக்கைக்கு தட்டுப்பாடு தொடர்கிறது. இதனால், நோயாளிகள் தரையில் அமர்ந்தும், படுத்தவாறும் சிகிச்சை பெற்று வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், இரும்பாலையில் 500 ஆக்சிஜன் படுக்கைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையிலும், அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெறும் நிலை நீடிக்கிறது. இதனை போக்க தமிழக அரசு தனிகவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 1 Jun 2021 1:03 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!