/* */

சேலம் புத்தக கண்காட்சி 2022 ல் தினந்தோறும் கலைமற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்

Salem Book Festival 2022- சேலம் புத்தகத்திருவிழா-2022 நேற்று துவங்கியது. தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் இலக்கிய பேச்சு , மொழிஅரங்கம் என நிகழ்ச்சிகள் தொடர்ந்து 30 ந்தேதிவரை நடக்கிறது.

HIGHLIGHTS

சேலம் புத்தக கண்காட்சி 2022 ல்   தினந்தோறும் கலைமற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்
X

Salem Book Festival ௨௦௨௨-சேலம் புதிய பஸ்ஸ்டாண்ட் மாநகராட்சித் திடலில் அமைக்கப்பட்டுள்ள  ’’சேலம் புத்தகத்திருவிழா கண்காட்சிக்கு  ஏராளமான வாசகர்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். (கோப்பு படம்)

Salem Book Festival 2022-சேலம் மாநகரில் புத்தகத்திருவிழா 2022 துவக்க விழா புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதியிலுள்ள மாநகராட்சி திடலில் நடந்தது.இத்துவக்க விழாவிற்கு சேலம் கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார்.

புத்தகத்திருவிழா அரங்கத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு . துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பப்பாசி அமைப்பின் செயலாளர் முருகன் கலந்துகொண்டு பேசினார். மேலும் இவ்விழாவில் மாநகரமேயர் ,நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு மக்கள் பிரதிநிதிகள் , உயரதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


கலைப்பண்பாட்டுத்துறை மண்டலக்கலை பண்பாட்டு மையம் சார்பில் சேலம் புத்தகத்திருவிழாவில் -கலைச்சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. (கோப்பு படம்)

இப்புத்தக கண்காட்சியானது நவ. 20 ந்தேதிதுவங்கி வரும் 30 ந்தேதி வரை நடக்கிறது. காலை 10 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை தொடர்ந்து திறக்கப்பட்டிருக்கும். இக்கண்காட்சிக்கு அனைவருக்கும் அனுமதி இலவசம்.இந்த 11 நாட்களுமே பல்வேறு தலைப்புகள் தினந்தோறும் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. இன்று 21ந்தேதி ''முன்னோர் மொழியரங்க நிகழ்ச்சி''யானது நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு கார்ப்பரேஷன் கமிஷனர் கிறிஸ்துராஜ் வரவேற்று பேசினார்.. முதன்மை விருந்தினராக சாகித்ய அகாடமி விருது பெற்ற இமையம் கலந்துகொண்டுவாழ்க்கையும் இலக்கியமும் என்ற தலைப்பில் பேசினார். எழுத்தாளரும், இயக்குனருமான பாரதிகிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு யாமறிந்த புலவரிலே என்ற தலைப்பில் பேசினார். டிஆர்ஓ மேனகா நன்றி தெரிவித்தார்.

3ம் நாளான 22ந்தேதி செவ்வாய் அன்று ''நாட்டுப்புறவியல் அரங்கம் ''நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கூடுதல் கலெக்டர், வளர்ச்சி பாலசந்தர் வரவேற்கிறார். முதன்மை விருந்தினராக எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு எழுத்தின் ஆணிவேர் என்ற தலைப்பில் பேசுகிறார். சிறப்பு விருந்தினராக கொளத்துார் வைரவேல் கலந்துகொள்கிறார். அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளி நன்றி தெரிவிக்கிறார்.

4ம்நாளான 23 ந்தேதி புதன் அன்று '' கதை சொல்லரங்கம் ''நடக்கிறது. இதற்கு ஸ்பெஷல் டிஆர்ஓ விஜய்பாபு வரவேற்கிறார். முதன்மை விருந்தினர்களாக எழுத்தாளர் பவா செல்லதுரை கலந்துகொண்டு கதையின் உயிர் மனிதனே என்ற தலைப்பில் பேசுகிறார். அதன்பின்னர் தமிழ்நாடு பாடநுால் மற்றும்கல்வியில் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டு கதை கேட்டு வளர்ந்தேன் என்ற தலைப்பில் பேசுகிறார். சேலம் மாநகர காவல்துறையின் துணை ஆணையர் வடக்கு மாடசாமி நன்றி தெரிவிக்கிறார்.

5 வது நாளான24 ந்தேதி ''வாசிப்பு மேம்பாட்டு அரங்கம்''நிகழ்ச்சிக்கு சிஇஓ முருகன் வரவேற்கிறார். முதன்மை விருந்தினராக மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் கலந்துகொண்டு விரைந்து பாயும் வெள்ளப் புதுக்கருத்து என்ற தலைப்பில் பேசுகிறார். சிறப்பு விருந்தினராக இடைப்பாடி அமுதன் கலந்துகொள்கிறார்.கல்லுாரிக் கல்வித்துறையி்ன் மண்டல இணை இயக்குனர் ராமலட்சுமி நன்றி தெரிவிக்கிறார்.

6வது நாளான 25ந்தேதி ''முற்போக்கு எழுத்தரங்கம்'' நிகழ்ச்சி நடக்கிறது. மாவட்ட வன அலுவலர் கௌதம் வரவேற்று பேசுகிறார். முதன்மை விருந்திராக கவிஞர் நந்தலாலா தொட்டால் பூ மலரும் என்ற தலைப்பில் பேசுகிறார். சிறப்பு விருந்தினராக சேலம் ராமன் கலந்து கொள்கிறார். கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ரவிக்குமார் நன்றி தெரிவிக்கிறார்.

7வ து நாளான 26 ந்தேதி ''தொன்மைத் தமிழரங்கம்''நிகழ்ச்சி நடக்கிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் வரவேற்கிறார். முதன்மை விருந்தினராக மதுரை எம்.பியும், சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளருமான சு. வெங்கடேசன் கலந்துகொண்டு தமிழும் தொன்மையும் என்ற தலைப்பில் பேசுகிறார். சிறப்புரையில் மேட்டூர் பாரி பேசுகிறார். வேளாண்துறை இணைஇயக்குனர் சிங்காரம் நன்றி தெரிவிக்கிறார்.

8 வது நாளான 27ந்தேதி ஞாயிறன்று ''துறைதோறும் தமிழரங்கம்''நிக்ழ்ச்சி நடக்கிறது. மாநகரக் காவல்துறை துணை கமிஷனர் லாவண்யா வரவேற்கிறார். முதன்மை விருந்தினராக தஞ்சை டாக்டர். சு.நரேந்திரன் கலந்துகொண்டு மருத்துவக்கல்வியும் மணித்தமிழும் என்ற தலைப்பில் பேசுகிறார். சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் அருள்மொழி நீதித்துறையும் நெடுந்தமிழும் என்ற தலைப்பில் பேசுகிறார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகசேலம் மாவட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி நன்றி தெரிவிக்கிறார்.

9வது நாளான 28 ந்தேதி ''சிறுவர் இலக்கிய அரங்கம்''நிகழ்ச்சி நடக்கிறது.இந்நிகழ்ச்சிக்கு சேலம் மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி வரவேற்கிறார்.முதன்மை விருந்தினராக சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கலந்துகொண்டு கால நிலை மாற்றம் என்ற தலைப்பில் பேசுகிறார். கவிஞர் ஆத்துார்சுந்தரம் கலந்துகொண்டு தட்டிஎழுப்பும் தாலாட்டுகள் என்ற தலைப்பில் பேசுகிறார். இறுதியில் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சிவக்குமார் நன்றி தெரிவிக்கிறார்.

10 வது நாளான 29 ந்தேதி ''வட்டார மொழியரங்கம்'' நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல்ஹோடா வரவேற்கிறார். முதன்மை விருந்தினராக சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கலந்துகொண்டு மக்கள் மொழி என்ற தலைப்பில் பேசுகிறார். பேராசிரியர் சுதந்திரம் கலந்துகொள்கிறார். இறுதியில் கால்நடைபராமரிப்புத்துறை மண்டல இணைஇயக்குனர் புருஷோத்தமன் நன்றி தெரிவிக்கிறார்.

11வது நாளான 30 ந்தேதி ''நாடகத்தமிழரங்கம் ''நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டசுற்றுலா அலுவலர் உமாதேவி வரவேற்கிறார். முதன்மை விருந்தினர்களாக முனைவர் வேலுசரவணன் கலந்துகொண்டு சிறுவர்நாடகம்-கடல்பூதம் என்ற தலைப்பில் பேசுகிறார். பேச்சாளர் பாரதி பாஸ்கர் கலந்துகொண்டு கடவுள் அமைத்து வைத்தமேடை என்ற தலைப்பில் பேசுகிறார். இறுதியில் மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி நன்றி தெரிவிக்கிறார்.

புத்தகத்திருவிழாவில் தினந்தோறும் நடக்கும் நிகழ்வுகளாக காலை 11மணி முதல் பிற்பகல் 3மணி வரை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடக்கிறது. பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியர்கள் மற்றும் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதன்மை மற்றும் சிறப்பு விருந்தினர்களின் சிந்தனை அரங்கம்நடைபெற உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 21 March 2024 7:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?