/* */

பெட்ரோல், டீசல் விலை குறைப்போம் என்பது ஏமாற்று வேலை -சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி காட்டம்

தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற வெளிப்படையான அறிவிப்பை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல் விலை குறைப்போம் என்பது ஏமாற்று வேலை -சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி காட்டம்
X

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ( சேலம் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது) 

சேலம் மாவட்டம் ஓமலூர் கட்சி அலுவலகத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளுமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளாட்சித் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக சட்டமன்ற தேர்தலில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப் போவதாக 505 அறிவிப்புகளை வெளியிட்டது. அந்த வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும், குறைப்பதாக வாக்குறுதி அளித்தது இதை நம்பி பொதுமக்கள் வாக்காளர்கள் திமுவுக்கு வாக்களித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த திமுக இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டமன்றத்திலேயே அதிமுக நேரடியாக வலியுறுத்தியும், திமுக பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காதது பொது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் தெரிவித்தார்.

அதேபோல் தமிழகத்தில் கொரானா காலத்தில் கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சிமெண்ட், மணல், கம்பி உள்ளிட்ட பொருட்கள் இரு மடங்கு உயர்ந்துள்ளதால் கட்டுமான தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எனவே உடனடியாக கட்டுமான பொருட்கள் விலை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கும் சலுகை வழங்கும் வகையில் அம்மா சிமெண்ட் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அம்மா சிமெண்ட் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நீட் தேர்வு விஷயத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் குழம்பிப்போய் உள்ளனர். இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற தெளிவான முடிவினை திமுக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட எதிர்க்கட்சி தலைவர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலேயே கடந்த காலங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு தேவை இல்லை என்றாலும் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகத்தில் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்க்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பெறாமல் திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்த ஆராய ஆணையம் அமைத்திருப்பது கேள்விக்குறியாக உள்ளது என்றும் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தற்போது தெளிவாக பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்துவதில் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் தினந்தோறும் தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி போடாமல் திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழக அரசு தடுப்பூசி விஷயத்தில் மக்களுக்கு ஒரு தெளிவான முடிவினை அறிவிக்க வேண்டும். தினந்தோறும் தடுப்பூசி இருப்பைப் பொறுத்து இவ்வளவு பேருக்குதான் தடுப்பூசி போடப்படும் என்பதை உணர்ந்து செய்தால் இது போன்ற குழப்பங்கள் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

மின் வினியோகத்தில் 22,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த முன்னாள் முதலமைச்சர் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில் தேவையான உற்பத்திக் கூடங்கள் மற்றும் தொழிற்சாலை அமைக்கவும் அரசு அப்போதைய காலகட்டங்களில் செயல்பட்டதாகவும் முக்கியமான நேரங்களில் மின் தடை ஏற்படுத்த கூடாது என்பதற்காகவே அதிக அளவில் கட்டணம் கொடுத்து மின்சாரம் பெற்றதாகவும் தெரிவித்தார்.

கிராமபுற மருத்துவமனைகளுக்கு அதிமுக அரசு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்து தற்போது கிராமப்புற மாணவர்கள் பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் பயின்று வருகிறார்கள்.

அதிமுக அரசு தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவின்படி தற்போது ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவர்களாக தகுதி பெற்றுள்ளனர். அதிமுக அரசின் இந்த நடவடிக்கை தன்னிச்சையாக எடுக்கப்பட்டதே தவிர இதற்காக யாரும் குரல் கொடுக்கவில்லை, பரிந்துரைக்கவும் இல்லை என்று தெரிவித்தார்.



Updated On: 30 Jun 2021 10:07 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!