/* */

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: சேலத்திலிருந்து ஹெலிகாப்டரில் சென்னை 'பறந்தது'

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டதை அடுத்து, சேலத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.

HIGHLIGHTS

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: சேலத்திலிருந்து ஹெலிகாப்டரில் சென்னை பறந்தது
X

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் மற்றும் நுரையீரலை, சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கோணம்பட்டி புதூரை சேர்ந்தவர் மாதேஸ்வரன். ஆண்டகளூர் கேட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். மாதேஸ்வரனுக்கும், தம்மம்பட்டி யைச் சேர்ந்த தீபா என்பவருக்கும் 4 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது.

கடந்த 18ஆம் தேதி, ஆண்டகளூர் கேட் அருகே இருசக்கர வாகனத்தில் மாதேஸ்வரன் சென்றபோது, அவ்வழியாக சென்ற கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாதேஸ்வரன் சேலம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர், நேற்று காலை மூளைச்சாவு அடைந்தார் இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். மாதேஸ்வரன் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சீலநாயக்கன்பட்டி யில் உள்ள காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, மாதேஸ்வரனின் இருதயம், கண்கள், நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல், மற்றும் தோல் ஆகியவை எடுக்கப்பட்டன.

மாதேஸ்வரன் இருதயம் மற்றும் நுரையீரல் ஆகியன, சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த மருத்துவமனையின் மருத்துவர் செந்தில் குமார் தலைமையிலான குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து உறுப்புகளை பெற்றுக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு கிளம்பினார். உடல் உறுப்புகளை விரைவாகக் கொண்டு செல்வதற்காக முன்னேற்பாடுகளை காவிரி மருத்துவமனை மற்றும் காமலாபுரம் விமான நிலைய அதிகாரிகள் செய்திருந்தனர்.

Updated On: 21 Jun 2021 6:09 AM GMT

Related News