/* */

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 91 கன அடியாக அதிகரிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை (ஏப்.,17) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 91 கன அடியாக அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 91 கன அடியாக அதிகரிப்பு
X

மேட்டூர் அணை.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை (ஏப்.,17) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 91 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியாக நீடிக்கிறது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 68 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (புதன்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 91 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 56.03 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 55.83 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 21.68 டிஎம்சியாக உள்ளது.

Updated On: 17 April 2024 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  2. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  3. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  4. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  5. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  7. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  8. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  10. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!