/* */

புத்தகத் திருவிழாக்கள் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் கருவி: இஸ்ரோ விஞ்ஞானி

புத்தகத் திருவிழாக்கள் வாசிப்பு பழக்கத்தை வெகுவாக அதிகரிக்கும் கருவியாக அமைந்துள்ளது என இஸ்ரோ விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

புத்தகத் திருவிழாக்கள் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் கருவி: இஸ்ரோ விஞ்ஞானி
X

சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாவில் இஸ்ரோ விஞ்ஞானி ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகார் சாஜி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் கலந்துகொண்டார்.

சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாவில் இஸ்ரோ விஞ்ஞானி ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகார் சாஜி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில், இஸ்ரோ விஞ்ஞானி ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகார் சாஜி தெரிவித்ததாவது:

இளைய சமுதாயத்தினரிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது என்ற கருத்து உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் புத்தகத் திருவிழாக்கள் நடத்துவதன் மூலம் வாசிப்பு பழக்கத்தை வெகுவாக அதிகரிப்பதற்கு ஒரு கருவியாக அமைந்துள்ளது. எந்த ஒரு சமுதாய முன்னேற்றத்திற்கும், தனிமனித முன்னேற்றத்திற்கும் கல்வி என்பது மிக அவசியமானதாகும். குறிப்பாக, அறிவியல் கல்வி மிகவும் அவசியம்.

முன்னேற்றம் அடைந்த நாடுகளாக இருந்தாலும், மகிழ்ச்சிக் குறியீட்டில் முன்னிலையில் உள்ள நாடுகளாக இருந்தாலும் அங்கு எழுத்தறிவு விகிதம் என்பது அதிகமாக உள்ளது. ஒரு சமுதாயத்தின் தடை கற்கள் என்பது வறுமை மற்றும் அறியாமை ஆகும். அவ்வாறான வறுமையையும், அறியாமையையும் ஒழிப்பதற்கு கல்வி மிக அவசியமானதாகும்.

சந்திரயான் 3, ஆதித்யா எல் 1 போன்ற செயல்திட்டங்களால் மாணவர்களாகிய உங்களிடம் அறிவியல் கருத்துகளின் புரிதல் அதிகரித்துள்ளது. மேலும், இஸ்ரோவின் இதுபோன்ற திட்டங்களால் நம் நாட்டின் மீதுள்ள மரியாதை வெகுவாக அதிகரித்துள்ளது. நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் போன்ற விண்வெளி நிறுவனங்கள் இஸ்ரோவிடம் சேர்ந்து பயணிப்பதற்கு தயாராக உள்ளனர்.

எனவே, கற்றல் என்பது பள்ளி, கல்லூரிகளுடன் நின்றுவிடக் கூடாது. கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய செயல்பாடாகும். தற்போதைய இணையதளம் மற்றும் அறிவியல் யுகத்தில் இன்றைய அறிவியல் கோட்பாடுகள் நாளைய தினம் மாறும் இச்சூழ்நிலையில், நாம் இன்று கற்றது நாளை மாறும் சூழல் ஏற்படாலாம். எனவே, கற்றலை வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அனைவரிடமும் பல்வேறு திறமைகள் உள்ளன. தங்களுடைய திறமைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். தங்கள் வாழ்வில் ஒரு இலக்கினை வைத்துக் கொண்டு, அதை நோக்கி பயணிக்கும் போது நிச்சயமாக வெற்றிபெற முடியும். இவ்வாறு இஸ்ரோ விஞ்ஞானி ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகார் சாஜி தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானி ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகார் சாஜி "விண்வெளிப் பயணத்தின் சவால்கள்" என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

Updated On: 1 Dec 2023 4:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...