/* */

ஆத்தூரில் விவசாயி வீட்டில் ரூ. 1 கோடி கொள்ளை.. போலீஸார் விசாரணை…

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே விவசாயி வீட்டில் சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்ட ஒரு கோடி பணம் கொள்ளை போனதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

ஆத்தூரில் விவசாயி வீட்டில் ரூ. 1 கோடி கொள்ளை.. போலீஸார் விசாரணை…
X

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் சார்வாய் புதூர் கிராமத்தில் சாமியார் கிணறு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். விவசாயி. இவர் தனது மனைவி மற்றும் தாயுடன் விவசாயத் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 7 ஆம் தேதி இரவு அந்தப் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்கு சென்று விட்டு அவர் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர், வீட்டிற்கு உள்ளே சென்று பீரோவை பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் சாக்கு மூட்டையில் வைத்து கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் கொள்ளை போனது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து லோகநாதன் தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீஸார் உடனடியாக லோகநாதனின் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தனது வீட்டில் இருந்த 48,000 பணம் மற்றும் கால் பவுன் தங்க நகையை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை அடித்து சென்றதாக லோகநாதன் கூறி உள்ளார். பின்னர், பீரோவில் சாக்கு மூட்டையில் வைத்திருந்த ஒரு கோடி ரூபாய் கொள்ளை போனதாக தெரிவித்தாராம்.

அதாவது, தனது நண்பரான ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் மணிவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பைகளில் இரண்டு கோடி ரூபாய்பணத்தை தனது வீட்டிற்கு கொண்டு வந்து அதை பாதுகாப்பாக வைக்கும் படி கூறிச் சென்றாதாகவும், அதில் ஒரு கோடியை பீரோவிலும் மற்றொரு கோடியை நெல் மூட்டைகளுக்கு இடையேயும் வைத்ததாகவும், பீரோவில் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மட்டும் கொள்ளை போனதாகவும் லோகநாதன் போலீஸாரிடம் தெரிவித்து உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும், லோகநாதனின் நண்பர் கோபாலகிருஷ்ணனையும் வரவழைத்து இரண்டு கோடிரூபாய் பணம் எப்படி வந்தது என்றும் விசாரித்தனர்.

அப்போது இரண்டு பேரும் முறையாக பதில் அளிக்காமல் மாறி மாறி தகவல்களை தெரிவித்ததால் போலீஸாருக்கு அவர்கள் மீது சந்தேகம் வந்துள்ளது. இதற்கிடையே, ஒரு கோடிரூபாய் பணம் கொள்ளை போனதாக லோகநாதன் வாய்மொழியாக புகார் கூறியதால் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் தீவிர கிடுக்குப் பிடி விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இருப்பினும், கொள்ளை தொடர்பாக லோகநாதன் இதுவரை எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை என்றும் அதனால் அவரிடம் சந்தேக கண்ணோட்டத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 11 Dec 2022 5:33 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!