/* */

வாழ்வாதாரமிழந்து தவிக்கும் தையல் தொழிலாளர்கள்: தீர்வு காண அரசுக்கு கோரிக்கை

கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு ஆண்டாக வேலையில்லாமல் திண்டாடி வரும் தையல் தொழிலாளர்கள், தீர்வுகாண அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்

HIGHLIGHTS

வாழ்வாதாரமிழந்து தவிக்கும் தையல் தொழிலாளர்கள்: தீர்வு காண அரசுக்கு கோரிக்கை
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம்,வாலாஜா,ஆற்காடு, இராணிப்பேட்டை மற்றும் விஷாரம் ஆகிய நகராட்.சிகள், மற்றும் நெமிலி,சோளிங்கர், காவேரிப்பாக்கம் உள்பட9 பேரூராட்சிகள் உள்ளன. அதுதவிர சில முதல்நிலை ஊராட்சிகளும் உள்ளன இவை அனைத்திலும் சுமார் 5000க்கும் மேற்பட்ட தையல் தொழிலாளர் உள்ளனர.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சீருடைகள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்களின் சீருடைகளைத் தைத்து வருவது அவர்களின் பிரதானமான வருமானமாகும் இடையில் பொது மக்கள் வழங்கும் பேண்ட்,சட்டைகளை தைத்தும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் காரணமாக அரசு முழு ஊரடங்கை அறிவித்தது. அன்றிலிருந்து இன்று வரை பள்ளி,கல்லூரிகள் முற்றிலுமாக இயங்க தடை செய்யப்பட்டது,. இதனால் இரு கல்வியாண்டாக மாணவ,மாணவியரின் சீருடைகள் தைக்கும் பணி முற்றிலுமாக முடங்கியது..

மேலும் மற்ற பொது நிகழ்ச்சிகளுக்கும் சில கடைகளுக்கு ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்திருந்தாலும், தையற் கடைகளைத் திறக்கவும் தடை விதித்து வந்தது. இதனால் அவர்களின் தொழில் கடந்த ஒரு ஆண்டாக தொழில் நடக்காத சூழலில் எந்தவித வருமானமும் உதவிகளுமின்றி குடும்பத்துடன் வறுமையில் தவித்து வருகின்றனர்.

இது குறித்து அவர்களது தையல் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மூலமாக தமிழக அரசிற்கு பல முறை கோரிக்கை வைத்த நிலையில் போராடி வருகின்றனர். அதில் தங்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரணம்,நோய் தொற்றால் உயிரிழந்ந தையல் தொழிலாளர் குடும்பத்திற்கு உதவி போன்றவற்றுடன் நெடு நாளைய கோரிக்கைகளான வாரியம் ,நலிவடைந்த தொழிலாளிக்கு ஓய்வூதியம், இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசுக்கு கோரிக்கையாக வைத்துள்ளனர்.

Updated On: 23 Jun 2021 4:12 PM GMT

Related News