/* */

பள்ளி செல்வதற்கு இரயில் இயக்கும்படி ஸ்டேஷன் மாஸ்டரிடம் மாணவர்கள் கோரிக்கை

பள்ளிக்கு சென்று வர வேலூர் கன்டோன்மென்ட் பாசஞ்சர் இரயிலை மீண்டும் இயக்க முகுந்தராயபுரம் ஸ்டேஷன் மாஸ்டரிடம் பள்ளி மாணவர்கள் கோரிக்கை

HIGHLIGHTS

பள்ளி செல்வதற்கு இரயில் இயக்கும்படி ஸ்டேஷன் மாஸ்டரிடம் மாணவர்கள் கோரிக்கை
X

வேலூர் கண்டோன்மென்ட் ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை வைத்த பள்ளி மாணவர்கள்

இராணிப்பேட்டை அருகே உள்ள மத்தியஅரசு பொதுத்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையின் ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் இராமகிருஷ்ணா மெட்ரிகுலேசன் மற்றும் மேல்நிலைப்பள்ளி , டிஏவி தனியார் பள்ளி உள்ளது. அவற்றில் ,பெல்நிறுவன ஊழியர்களின் பிள்ளைகள் மற்றும் அரக்கோணம், சித்தேரி,பாணாவரம், அம்மூர் மற்றும் திருவலம் ஒட்டிய சுற்று வட்டார பகுதிகளில்இருந்து ஏராளமான மாணவ,மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

அவர்கள் அரக்கோணத்திலிருந்து வேலூர் செல்லும் வேலூர் கண்டோன்மென்ட் பாசஞ்சர் மூலம் முகுந்தராயபுரம் இரயில் நிலையம் இறங்கி பள்ளிக்கு செல்வர், தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி ரயிலின் இயக்கம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில்பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து மேற்படி பகுதிகளிலிருந்து பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ,மாணவியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் இரயிலில் வரும் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து முகுந்தராயபுரம் இரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டரிடம், அரக்கோணம், சித்தேரி, தலங்கை, அம்மூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பள்ளிக்கு வேலூர் கண்டோன்மென்ட் இரயில் மூலம் வந்து சென்ற நிலையில், .தற்போது பள்ளி திறக்கப்பட்டும், மீண்டும் கன்டோன்மென்ட் ரயில் இயக்கப்படாமல் உள்ளதால் பேருந்தில் பள்ளிக்கு வந்து செல்வதாக கூறினர்

மேலும், பேருந்து மூலம் வருவதால் சரியான நேரத்திற்கு வந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதால், அரக்கோணத்திலிருந்து வேலூர் வரை செல்லும் கண்டோன்மென்ட் ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை வைத்தனர்.

பள்ளி மாணவ, மாணவியர்கள் இரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டரிடம் இரயிலை இயக்க கோரிக்கை வைத்த சம்பவம் அப்பகுதியினரிடையை வேதனையையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது. எனவே, இவர்களது கோரிக்கையை இரயில்வே நிர்வாகம் அறிந்து நிறைவேற்றிட வேண்டு்ம் என சமூக ஆர்வலர்கள் இரயில்வே நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்...

Updated On: 2 Nov 2021 9:12 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!