/* */

பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை: எஸ்பி அறிவிப்பு.

இளைஞர்களை விதிகளை மீறி வெளியில் செல்லாமல் தடுத்து புத்தாண்டை வீட்டிலேயே கொண்டாட பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டு்ம்

HIGHLIGHTS

பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை: எஸ்பி அறிவிப்பு.
X

பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட போலீஸ் எஸ்பி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்தியன் வெளியிட்ட தகவல்: மாவட்டத்தில் பொது இடங்களில் புத்தாண்டு இரவு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு கொரோனா மற்றும் உருமாறிய ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில்உள்ளது. .மேலும் பண்டிகை நாட்களில் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது.

எனவே அந்த வழிகாட்டுதலின்படி இராணிப்பேட்டை மாவட்டத்தில் 31ந்தேதி இரவு , புத்தாண்டை பொது மக்கள் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள்,,தங்கும் விடுதிகள்,நட்சத்திர ஓட்டல்கள்,தேசிய நெடுஞ்சாலை மற்றும் சாலைகளில் ஆகியவற்றில் கூடி கொண்டாட தடை விதிக்கப்படுகிறது . மேலும் மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத்தலங்கள்,பொதுமக்கள் அதிகம. கூடும் இடங்களில் காவல் ஆய்வாளர்கள்,உதவிஆய்வாளர்கள் தலைமையில் போலீஸார் , ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை, சாலைக்குற்றங்களைத்தடுக்க ரோந்து போலீஸார் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், பைக்கில் 2,பேருக்குமேல் ஓட்டிசெல்பவர்கள் மற்றும் அதிவேக வாகன ஓட்டிகள் போன்ற போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து தடுக்க மாவட்டம். முழுவதும்55இடங்களில் வாகனத் தணிக்கை செய்யப்படும்.மேலும், மாவட்டத்தில் 600 போலீஸார் புத்தாண்டு பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

எனவே புத்தாண்டை கொண்டாட்டம் என்ற பெயரில் போதையில் வாகனம் ஓட்டுவது, அதிவேகத்தில் ஓட்டிக்கொண்டே,செல்போன்பேசிக் கொண்டும் வாழ்த்துகளை தெரிவித்தல். பைக்குகளில் இருவருக்குமேல் ஏற்றிக்கொண்டு ஓட்டிசெல்வது போன்ற செயல்கள் விபத்துகளுக்கு வழிவகுக்கும் . எனவே விதிகளை மதித்து இளைஞர்கள் சந்தோஷத்துடன் கொரோனா நோய்த்தொற்றில்லாத புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும். அதேபோல இளைஞர்களை விதிகளை மீறி வெளியில் செல்லவிடாமல் தடுத்து புத்தாண்டை குடும்பத்துடன் வீட்டிலேயே கொண்டாட பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டு்ம். விதிகளைமீறி நடக்கும் பட்சத்தில் காவல்துறைசார்பில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

Updated On: 30 Dec 2021 3:57 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?