/* */

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஆர்எஸ்எஸ் தீபாவளிக் கொண்டாட்டம்

இராணிப்பேட்டை காரை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளி மாணவர்களுடன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் தீபாவளி விழா கொண்டாடினர்.

HIGHLIGHTS

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஆர்எஸ்எஸ் தீபாவளிக் கொண்டாட்டம்
X

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தீபாவளிக் கொண்டாடிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர்

இராணிப்பேட்டை அருகே காரை கூட்ரோடில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. அங்கு 50க்கும்மேற்பட்ட மாணவர்கள. பயின்று் வருகின்றனர். இராணிப்பேட்டை மாவட்ட ஆர் எஸ்எஸைச் சார்ந்தவர்கள் ஆண்டு தோறும் தீபாவளியை சிறுவர் சீர்திருத்தப் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் வழக்கம்போல தீபாவளி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் இராணிப்பேட்டை நகரத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

மாவட்ட பேச்சாளர்குழு பொறுப்பாளர் முரளிகிருஷ்ணன், நகரசெயலாளர் தேவதாஸ், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர் நகர் பேச்சாளர் குழு அமைப்பாளர் சிவகுமார், வாசுதேவன் வரவேற்றார் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் நாகராஜன் மாணவர்களிடையே தீபாவளி பண்டிகை குறித்து பேசினார்.

மேலும் தொடர்ந்து அவர், அனைவருக்கும் நாட்டுப்பற்று அவசியம் இருக்கவேண்டும். தேசப்பற்றுடன் இருந்தாலே நம்மிடம் ஒழுக்கம் தானாக வந்துவிடும் நாட்டுப்பற்றுடன் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை அதற்கு உதாரணமாக விளங்கி வருகிறது. கல்வி கற்பது மட்டுமே உங்களுக்கு லட்சியமாக இருக்கவேண்டும் என்றும் பாரதியார், விவேகாநந்தர். போன்றோரின் பாடல்கள் தத்துவங்களை எடுத்துக்கூறி விளக்கினார்.

பின்னர் விழாவில் தேசபக்தி பாடல்களைப் பாடினர். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பட்டாசுகள் வழங்கி வெடிக்கச் செய்தனர். அப்போது மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடினர். இறுதியாக அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்தினர்.

முன்னதாக விழாவில் மாணவர்கள் சிறப்பு விளையாட்டு, யோகாசனங்களை செய்தனர். விழாவில் குடும்பத்துடன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர், மற்றும் வித்யாபாரதி அமைப்பினர் ஏராளமானோர் கலத்து கொண்டு மாணவர்களுடன் சேர்ந்து தீபாவளி விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Updated On: 4 Nov 2021 2:19 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?