/* */

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடன் உதவி வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு கடன்களை விரைந்து வழங்க ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசினார்.

HIGHLIGHTS

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடன் உதவி வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம்
X

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கடனுதவி குறித்த ஆலோசனைக் கூட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில் வங்கிகள், அரசுத் துறைகள் மூலம் விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்களுக்கு கடனுதவிகள் நல்ல இலக்கை அடைந்து வருகிறது.

மாவட்ட தொழில்மையம், தொழில் தொடங்கடன் உதவிகள், தாட்கோ வங்கி கடன், மகளிர் உதவி குழுக்களுக்கான கடன், மற்ற துறைகளின் முலமான கடன்கள் குறித்து வங்கிகளின் இலக்கு எட்டியவை குறித்து மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வங்கி அதிகாரிகள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில், கடன் வழங்குவதில் ஏற்படும் பிரச்சினைகள் அவற்றை களயவேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

மாவட்டத்தில் மகளிர் சுயுதவிக்குழுவுக்கு நிர்ணயிக்கப்பட்ட₹350கோடி கடன் இலக்கில் இதுவரை 60கோடிமட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதி இலக்கை விரைந்து வழங்கிடவேண்டும் .மகளிர் குழுவிற்கு வழங்குவதால் குடும்பங்கள் ஏழ்மை நீங்கி,குடும்ப பொருளாதாரம் சமூக பொருளாதரம் வளரும் என்றார்.

மகளிர் சுயவுதவிக்குழுவினர் 100 சதவீதம் கடனைதிருப்பி விடுகின்றனர். மீண்டும் மீண்டும் கடன் வழங்க வேண்டும். அதிகபட்சமாக ரூ.20லட்சம் வரை கடன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து வங்கிகளும் மகளிர்குழுவிற்கு கடன் களை வழங்கி சிறப்பாக இயங்கும் குழுவினரை ஊக்குவிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்யவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அவர்களுக்கு கடனுதவி வழங்குவதை நிறுத்தக்கூடாது என்றார்.

மேலும்,கொரோனா தொற்று காரணமாக தெருவோர கடைவியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர் .எனவே, அவர்களின் கடன்தொகை ₹10000ஐ வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் வழங்கிட வேண்டும். இதுவரை 354 கடனுக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. அவற்றை பரிசீலித்து விரைவில் வழங்கவேண்டும் என தெரிவித்தார்.

பின்பு அவர், மாவட்டத்தில் உள்ள 16 மீன் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 222 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. அதில் தனி கவனம் செலுத்தி தகுதியான நபர்களைக் கண்டு நேரடிகள ஆய்வு செயது அவர்கள் தொழில் மேம்பட விரைந்து கடன் வழங்கிட மீன் வளத்துறை உதவி இயக்குநருடன் இணைந்து செயல்படும்படி ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பேசினார்.

ஆய்வு கூட்டத்தில் ஊரக திட்ட இயக்குநர் முகமை லோகநாயகி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கிருஷ்ணராஜ், நபார்டு வங்கி மாவட்ட மேம்பாடு திட்ட மேலாளர் ஸ்ரீராம், முன்னோடி வங்கிகளின் மேலாளர் ஆவியம்மா ஆப்ரகாம், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ஆனந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் விஜயகுமார், மாவட்ட தாட்கோ வங்கி மேலாளர் பிரேமா உள்ளிட்ட அனைத்து வங்கி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Aug 2021 3:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது