/* */

ராணிப்பேட்டை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 81 சதவீத வாக்குப் பதிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 3 ஒன்றியங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 81% பேர் வாக்களித்தனர்.

HIGHLIGHTS

ராணிப்பேட்டை  ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 81 சதவீத வாக்குப் பதிவு
X

ராணிப்பேட்டையில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிதேர்தல் 6ந்தேதி,9ந்தேதி என்று 2கட்டங்களாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

.அதனையொட்டி இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் முதற்கட்டமாக ஆற்காடு,திமிரி ,, வாலாஜாப்பேட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள 6 மாவட்டகவுன்சிலர்கள்,56 ஒன்றிய கவுன்சிலரகள், ௧௩௨ ஊராட்சி தலைவர்கள் ,மற்றும் 816 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடந்த்து.


அதில், வாலாஜாவில்36,ஆற்காட்டில் 61பேர் மற்றும் திமிரியில்74, என 171பேர் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டனர் .மீதமுள்ள பதவிகளுக்கு வாலாஜா 240 ,ஆற்காடு 187,திமிரி 226 என 3 ஒன்றியங்களில் 653 வாக்குச்சாவடிகளில் காலை7மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. ஆங்காங்கே கட்சியினர்,மற்றும் சுயேட்சை ஆதரவாளர்களிடையே சலசலப்புகள் ஏற்பட்டது

இருப்பினும் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர்அதிகாரிகள் நேரில் சென்று அவற்றை சரிசெய்ததில் எந்த வித அசம்பாவிதங்களுமின்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது .

தேர்தலில் ,96 கிராமங்களில் 196 பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு அம்மையங்களை மத்திய அரசின் தேர்தல் நுண் கணகாணிப்பாளரகள் வாக்குப்பதிவு மையங்கள் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுபட்டனர்..

மேலும் , உயர்நீதிமன்ற உத்தரவின்படி வாக்குப் பதிவு மையங்களில் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அவற்றை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் பார்வையிட்டார்.

அதேபோல ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் வாக்குப் பதிவுகளை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில்,ஆற்காடு ஒன்றியத்தில் மொத்தமுள்ள 86686பேரில் 187வாக்கு மையங்களில் 72138பேர் வக்களித்து 83சதவீத வாக்குகள் பதிவானது.

திமிரி ஒன்றியத்தில் 85893பேரில் 71637பேர் வாக்களித்ததில் 83சதவீதமும், வாலாஜா ஒன்றியத்தில்127786 ல்99189 வாக்குகள் பதிவாகியது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு,திமிரி,மற்றும் வாலாஜா ஆகிய ஒன்றியங்களில் முதற்கட்டமாக நடந்த தேர்தலில் 242964 பேர் வாக்களித்ததில் சராசரி மொத்தப்பதிவாக 81சதவீத வாக்குகள் பதிவானது.

தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப் பெட்டிகள் சீலிடப்பட்டு ஒன்றியங்கள் ஆற்காட்டில் ஜிவிசி கல்வியியல் கல்லூரி ,திமிரி ஆதிபராசக்தி கலைக்கல்லூரி , வாலாஜா இராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் வைக்கப்பட்டது.

பின்னர்,பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகள் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பாஸ்கரப்பாண்டியன் முன்னிலையில் சீலிடப்பட்டது.

தற்போது அவை வாக்கு எண்ணிக்கை தினமான 12 ந்தேதி வரை 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Updated On: 7 Oct 2021 2:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு