ஆற்காட்டில் காந்தி ஜெயந்தியையொட்டி ஆர்எஸ்எஸ் சார்பில் மாகா சேவாதினம்

ஆற்காட்டில் காந்தி ஜெயந்தியையொட்டி ஆர்எஸ்எஸ் சார்பில் மாகா சேவாதின தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஆற்காட்டில் காந்தி ஜெயந்தியையொட்டி ஆர்எஸ்எஸ் சார்பில் மாகா சேவாதினம்
X

ஆற்காட்டில் காந்திஜெயந்தி தினத்தையொட்டி ஆர்எஸ்எஸ் சார்பில் மகா சேவாதினமாக சுற்றுபுற தூய்மை பணிகளை செய்தனர்.

ஆற்காட்டில் காந்திஜெயந்தி தினத்தையொட்டி ஆர்எஸ்எஸ் சார்பில் மகா சேவாதினமாக சுற்றுபுறத்தை தூய்மை பணிகளை செய்தனர்.

ஆண்டு தோறும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ந்தேதி நாடு முழுவதுமுள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மகாசேவாதினம் என்றபெயரில் மாசடைந்து காணப்படும் சுற்றுபுறபகுதிகளை தூய்மைப்படுத்தி சீரமைக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.

அதனடிப்படையில், இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாகா சேவதின நிகழ்ச்சி நடந்தது. அண்ணாமலை அறக்கட்டளையின் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். பாஜக தேசியப்பொதுக்குழு உறுப்பினர் தணிகாசலம் ,மாவட்ட துணைதலைவர் மனோகரன், செயலாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இராணிப்பேட்டை மாவட்ட ஆர்எஸ்எஸ்தலைவர் நாகராஜன் பேசுகையில், மகாத்மா காந்தி பிறந்த நாள் காந்தி ஜெயந்தியாக நாடு முழுவதுமாக கொண்டாடப்பட்டு வருகிறது ஆர்எஸ்எஸ் அவரது லட்சியக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக தூய்மைப்படுத்தும் பணிகளை செய்யும் மகா சேவாதினமாக அறிவித்து நாடு முழுதும் மக்கள் செல்லும் பொது இடங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்திவருகிறது.

அதே போன்று இத்தினத்தில் பல காலமாக தூய்மைப்படுத்தாமல் பாழடைந்து காணப்படும் கோயில் ,மண்டபங்கள்,சாலைகள், பூங்காக்கள் ஆகியவற்றை சீரமைத்தல், மரக்கன்றுகளை நடுதல் பசுமைப்பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளுதல் நீர் ஆதாரப்பகுதிகளாக விளங்கும், குளக்கரைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை இன்றையதினத்தில் ஆர்எஸ்எஸ் ஆற்றி வருகிறது . அதன் பேரில் இங்குள்ளபகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணி நடக்கிறது என்றுார் அவர்.

நிகழ்ச்சியில், 20க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், அண்ணாமலை அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள்,பாஜக நிர்வாகிகள்மற்றும் சமூக ஆர்வலவர்கள் 60க்கும் மேற்பட்டவர்கள் ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகப் பகுதிகளை தூய்மைபடுத்தினர். நிகழ்ச்சியின் நிறைவாக அனைவருக்கும் நினைவு பரிசினை ஆற்காடு விஏஓ கபிலன் வழங்கினார்..

Updated On: 2 Oct 2021 6:00 PM GMT

Related News

Latest News

  1. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  2. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  3. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  5. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
  6. சோழவந்தான்
    மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
  7. உலகம்
    ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
  8. கோவில்பட்டி
    கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
  9. திருச்செந்தூர்
    மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…
  10. மேலூர்
    மதுரை அருகே ஆலத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்