நாட்டுக்கோழிகள் வளர்ப்பதற்கு மானியம்: கால்நடைத் துறை அறிவிப்பு

1000 நாட்டுக்கோழிகள் வளர்த்தால் ₹ 75,000 வரை மானியம் கிடைக்கும் என கால்நடை மண்டல இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாட்டுக்கோழிகள் வளர்ப்பதற்கு மானியம்: கால்நடைத் துறை அறிவிப்பு
X

அரக்கோணத்தில் நடைபெற்ற நாட்டுக்கோழி வளர்ப்புப் பயிற்சி முகாம்

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் ஒருங்கிணைந்த வேலுார் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தொழில் முனைவோர் மேம்பாடு திட்டத்தின்கீழ் நாட்டுக்கோழி வளர்ப்புப் பயிற்சி முகாம் நடந்தது.

முகாமிற்கு, வேலுார் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பாஸ்கரன், வடமாம்பாக்கம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பஞ்சாட்சரம் ஆகியோர் பங்கேற்றனர்

பயிற்சி முகாமை, ஒருங்கிணைந்த வேலுார் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நவநீத கிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசுகையில், நாட்டுக்கோழி வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், ஊராட்சி ஒன்றியம் ஒன்றிற்கு 5 பேர் வீதம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியத்தில் 35 பேர் என்ற நிலையில், ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களிலிருந்து மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, கோழிப் பண்ணை அமைக்க பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

கோழிகளை வளர்க்க, பண்ணை அமைக்கும் இடம், குடிநீர், போக்குவரத்து வசதிகள் மற்றும், தொழில் முனைவோர் முன்னுரிமை ஆகியவை குறித்து தெரிவிக்கப்படும். மேலும்,நாட்டுக்கோழிக் குஞ்சு ஒன்று ரூ.30 என்று 1,000 குஞ்சுகள் வாங்கிய வகையில். மானியமாக ₹15 ஆயிரம் அளிக்கப்படும். பின்பு கோழி குஞ்சுகளுக்கு தீவனம், இன்குபேட்டர் வாங்க மானியம் வழங்கப்படும். அதற்கு ஆகும் ₹1.50 லட்சம் செலவில் 1,000 நாட்டுக் கோழிகளுக்கு ரூ.75,000 மானியமாக அளிக்கப்படும்.

எனவே, படித்து வேலை இல்லாத இளைஞர்கள், நாட்டுக்கோழிகளை வளர்த்து பயன் பெறலாம். தற்போது, பிராய்லர் கோழிகளை விட நாட்டு கோழிகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. நாட்டுக்கோழி குஞ்சுகள், வேலுாரில் உள்ள கால்நடை பல்கலைக்கழகத்தில் கிடைக்கும். பதிவு செய்த 45 நாட்களுக்கு பின்னர் வழங்கப்படும்.

கோழிக்கான தீவினங்களை அரைத்து தரும் மையங்கள் விரைவில் அமைக்கப்படும். நாட்டுக் கோழிகள் கொள்முதல் மையங்கள் அமைப்பது, அவற்றை வளர்ப்பது குறித்தே அரசு முடிவு எடுக்கும். அதுவரையில், உற்பத்தியாளர்களே ஓட்டல்கள், வாரச்சந்தைகள் இறைச்சி கடைகளில் விற்பனை செய்து கொள்ளலாம். நேரடியாக விற்பனை செய்தால் அதிக லாபத்திற்கு வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து, நாட்டுக் கோழிகள் வளர்ப்பவர்கள் கூறுகையில் நாட்டுக் கோழிகளை வளர்த்த பிறகு விற்பனை செய்ய அரசு மையங்களை ஏற்படுத்த வேண்டும். தனியாரிடம் விற்றால் நஷ்டம் ஏற்படுகிறது. கொரோனாவால் 2 லட்சம் சேவல்கள், 10 லட்சம் கோழிகளை விற்க முடியாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று வேதனையாகக் கூறினர்.

பயிற்சி முகாமில் கறவை மாடுகளுக்கு, பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடை பல்கலைக்கழத்தால் தயாரிக்கப்பட்ட தானுவாஸ் கிராண்ட் என்ற நுண்ணுாட்டச் சத்து மருந்து 200 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

முகாமில், கால்நடை மருத்துவர்கள் ஜெயமணி, சுமித்ரா, ஸ்ரீதேவி, ராஜேஷ்குமார், சக்தி நாகராஜ், உதவி கால்நடை மருத்துவர்கள், மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். இறுதியாக ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.

Updated On: 29 Aug 2021 4:18 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம்: பொது வழியில் காரை நிறுத்தியதை தட்டி கேட்டவருக்கு அடி,...
 2. இந்தியா
  நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருது..!
 3. புதுக்கோட்டை
  எழுத்தாளர் அகிலன் பெயரில் நூலகம் அமைக்கப்படும்: புதுக்கோட்டை எம்எல்ஏ ...
 4. காஞ்சிபுரம்
  விவசாயிகள் வீண் செலவை குறைக்கும் நானோ யூரியா: காஞ்சிபுரம் ஆட்சியர்...
 5. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைகேட்பு முகாம்: பல்வேறு கோரிக்கைக்காக...
 6. குமாரபாளையம்
  குமாரபாளையம் லட்சுமி நாராயண சுவாமி கோவில் உண்டியல் திறப்பு
 7. காஞ்சிபுரம்
  முதல்வர் நிகழ்வில் முகக்கவசம் அணியாமல் உடன்பிறப்புகள் அலட்சியம்..!...
 8. லைஃப்ஸ்டைல்
  Thiripala Suranam benefits in Tamil திரிபலா சூரணம் பயன்கள் தமிழில்
 9. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம்
 10. புதுக்கோட்டை
  தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு: மேலப்பட்டி மாணவர்களுக்கு வாசகர்...