/* */

இராமநாதபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை, பூசாரி கைது

இராமநாதபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தை, பூசாரி இருவரும் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

இராமநாதபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை, பூசாரி கைது
X

 பூசாரி சிவக்குமார்.

இராமநாதபுரம் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. பிளஸ்-1 படித்து வந்த இவரின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இராமநாதபுரம் வந்து பூகட்டும் வேலையும், சில நேரங்களில் கொத்தனார் வேலையும் பார்த்து வந்துள்ளார். இவரின் தாய் பூகட்டும் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சிறுமியிடம் அவரின் தந்தை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை கண்டு அஞ்சிய சிறுமியிடம் வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்று தந்தை மிரட்டி உள்ளார். இதனால் அவருக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு சரியாக சாப்பிடாமலும், படிக்காமலும் இருந்து வந்துள்ளார்.

இதன் காரணமாக தாய் இவரின் மேல் சந்தேகமடைந்து டாக்டரிடம் சென்று காண்பித்துள்ளார். அதன் பின்னரும் சரியாகவில்லை என்பதால் இராமநாதபுரம் அருகே கொட்டகை பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் சிவக்குமார்(வயது 47) என்ற பூசாரியிடம் அழைத்து சென்றுள்ளார். அங்கு இரவு 10 மணி அளவில் தனியாக அறைக்குள் அழைத்து சென்று பால் கொடுத்துள்ளார். இந்த பாலை குடித்த சிறுது நேரத்தில் மயங்கிவிட்டாராம். அந்த சமயத்தில் பூசாரி சிவக்குமார் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி வீட்டிற்கு வந்ததும் முன்பை விட மனதளவில் பாதிக்கப்பட்டு கவலையில் ஆழ்ந்துள்ளார். அதனை தொடர்ந்தும் அவரின் தந்தை தொல்லை கொடுத்ததோடு மிரட்டல் விடுத்து வந்துள்ளார். ஒருபுறம் தந்தையின் பாலியல் தொல்லை, மறுபுறம் பூசாரியால் பாலியல் தொல்லை என்று பாதிக்கப்பட்ட சிறுமி அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றுள்ளார். ஒருகட்டத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை தாங்க முடியாமல் சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியை அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவரின் தந்தை தன்னை சிறுவயது முதலே இதுபோன்று தொல்லை கொடுத்து வந்ததாகவும், வயதுக்கு வந்தவுடன் அவர் வெளிநாட்டில் இருந்து வந்துவிட்டதால் தொல்லை அதிகரித்து வந்ததாகவும் கதறி அழுதுள்ளார். அவரிடம் தொடர் விசாரணை நடத்தியபோது தான் பூசாரியின் தொல்லையும் தெரியவந்துள்ளது. சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து அழுதததால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். இவரின் நிலையை கண்டு அவரின் தாய் மற்றும் உறவினர்கள் பூசாரி சிவக்குமாரிடம் அழைத்து சென்றுள்ளனர்.

அவரை பார்த்தும் சிவக்குமார் முற்றிய நிலையில் அழைத்து வந்துள்ளீர்கள் இதற்கு பரிகாரம் செய்து சரிசெய்ய ரூ.30 ஆயிரம் செலவாகும் என்று கூறியுள்ளார். இதன்படி பரிகாரம் செய்ய சுடுகாட்டின் அருகில் உள்ள கூரை கொட்டகைக்கு அழைத்து சென்றுள்ளார். வெளியில் தாய் மற்றும் உறவினர்களை காக்க வைத்துவிட்டு அவர்களின் செல்போனை வாங்கி வைத்து கொண்டாராம். கூரை கொட்டகைக்குள் அவர் சிறுமியை அழைத்து சென்று இந்த தொல்லை கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து சிறுமியின் தந்தை மற்றும் பூசாரி சிவக்குமாரை கைது செய்தனர். இராமநாதபுரத்தில் பெற்ற மகளையே சிறுவயது முதல் பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டி வந்த தந்தை ஒருபுறம், பரிகாரம் செய்ய சென்ற இடத்தில் பூசாரியின் பாலியல் தாக்குதல் ஒருபுறம் என சிக்கி சீரழிந்த சிறுமியை நிலை பரிதாபமாக உள்ளது. விசாரணைக்கு பின்னர் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் தந்தையும், பூசாரியும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Updated On: 11 Nov 2021 7:09 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?