/* */

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை:  அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
X

இராமநாதபுரத்திவ் வடகிழக்கு பருவமழை தொடர்பாக அமைச்சர் தங்கம்தென்னரசு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். கொரோனா பரவல் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் அதனை போர்கால அடிப்படையில் எதிர்கொண்டு மக்கள் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் கையாண்டதோடு, பொதுமக்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். அந்தவகையில் அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழை, வெள்ளம் போன்ற இடர்பாடுகளை எதிர்கொள்ள ஏதுவாக மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து கண்காணிப்பதற்காக மாவட்டங்கள் வாரியாக கண்காணிப்பு அமைச்சர்கள் நியமித்து தமிழ்நாடு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அந்தவகையில், இராமநாதபுரம் மாவட்டத்தின் கண்காணிப்பு அமைச்சராக பணி செய்ய எனக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம் பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்ட மாவட்டம். வேளாண்மை, மீன்பிடி மற்றும் நெசவு ஆகிய முன்று தொழில்களும் பொதுமக்களின் முக்கிய தொழில்களாக உள்ளன. இந்த மாவட்டம் மிகவும் பின் தங்கிய மாவட்டம் என்ற பொதுவான பார்வை பெரும்பான்மையாக உள்ளது.

கலைஞர்; இம்மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினார்கள். மக்கள் நலனுக்காக தமிழ்நாடு அரசு சௌல்படுத்தும் திட்டங்களை முழுமையாக பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். குடிநீர் வசதி, சாலை வசதி, பொது சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த வகையில் இன்று நடைபெறும் இந்த ஆய்வுக் கூட்டத்தை ஒரு துவக்க கூட்டமாக கருதலாம். தொடர்ந்து இது போன்ற ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்கப்படும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம்; (இராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி), இராம.கருமாணிக்கம்; (திருவாடானை), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திசைவீரன், துணைத் தலைவர் வேலுச்சாமி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Oct 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?