/* */

இராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

இராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை. தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.

HIGHLIGHTS

இராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
X

இராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை. தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இரண்டு நாட்கள் ஒரு சில இடங்களில் கன முதல், மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக, மாவட்டங்களான இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில் இராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் கொளுத்தினாலும், அவ்வப்போது மழை பெய்ததால் வெப்பம் தனிந்து இருந்து வந்தது. இன்று பகல் முழுவதும் விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில், இரவு 8 மணிக்கு மேல் இராமநாதபுரம் நகர் பகுதி, ஆர்.காவனூர், பெரியார் நகர், பட்டினம்காத்தான், ஆட்சியர் அலுவலகம், புதிய பேருந்து நிலையம் மற்றும் இரயில்வே நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தெருக்களின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. மேலும், தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் கோடை வாசஸ்தலம் போல் இராமநாதபுரம் நகர் பகுதி காட்சியளிக்கிறது.

Updated On: 12 April 2022 12:47 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...