/* */

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்தது சென்றது.

HIGHLIGHTS

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் கைது
X

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது. இந்த கைது நடவடிக்கையால் ராமேஸ்வரம் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் தமிழக அரசு வழங்கும் மீன் பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குள் கடலுக்கு சென்றனர். மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது நேற்று இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தென்னரசு, லியோன் பீட்டர், கருப்பையா உள்ளிட்ட ஆறு பேருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகுகளையும் அதில் இருந்த கோபி, சக்தி, பிரபு, குட்வின், கருமலையான், ராஜு உள்பட 43 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 43 மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து, யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளனர். மேலும் மீனவர்கள் பிடித்து படகுகளில் இருந்த மீன்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

ஒரே நாள் நள்ளிரவில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 43 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்ற சம்பவத்திற்கு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் மீனவர் சங்கம்கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இலங்கை பிரச்சினை காரணமாக பாரம்பரிய மீனவர்கள் மீன் பிடி தொழிலை விட்டு மாற்று தொழில் தேடி அண்டை மாநிலங்களுக்கு பஞ்சம் பிழைக்க செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் மீன் பிடி தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பேர்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி நல்ல தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், மீனவர்கள் சிறைபிடிப்பை கண்டித்து தமிழக மீனவர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்த மடிவு செய்துள்ளதாக ராமேஜ்வரம் மீனவ சங்கம் தெரிவித்துள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 43 மீனவர்கள் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றது ராமேஸ்வரம் சுற்றுவட்டார மீனவ கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Updated On: 20 Dec 2021 8:51 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...