Begin typing your search above and press return to search.
இராமநாதபுரம் அருகே மரத்தில் வேன் மாேதி ஓட்டுனர் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்
இராமநாதபுரம் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் 23 பேர் காயம். ஒருவர் உயிரிழப்பு.
HIGHLIGHTS

பைல் படம்.
இராமநாதபுரம் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் 23 பேர் காயம்.ஒருவர் பலி.
தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியிலிருந்து இராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக ஒரு வேன் மூலம் 23 பேர் புறப்பட்டு வந்துள்ளனர். இவர்கள் வந்த வேன் இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சென்றபோது தூக்கக்கலக்கத்தில் வேன் பனை மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் வேன் ஓட்டுநர் நவநீதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த வேனில் பயணம் செய்த 14 பெண்கள் 4 குழந்தைகள் உட்பட 23 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.