/* */

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்துஆய்வு

இராமநாதபுரம் ஆய்வு.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்துஆய்வு
X

இராமநாதபுரம் பல்வேறு பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் தற்போது 1287 நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 825 பேர் அவர்களது சொந்த வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 73,236 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இராமநாதபுரம் அரசு மருத்துவ மருத்துவக் கல்லூரியில் 11 ஆயிரம் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் சேமிப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 1800 லி முதல் 2200 லி அளவு திரவ ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோருக்கு சிகிச்சைக்காக போதிய அளவு ஆக்கிஜன், படுக்கைகள், உயிர் காக்கும் மருந்துகள் தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில், மாவட்டத்தில் இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் நகராட்சிகள், மண்டபம் மற்றும் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. அதன்படி, இப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

ந்த வகையில் அரசு முதன்மை செயலாளர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஆகியோர் இராமநாதபுரம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்கள். குறிப்பாக, இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டூரணி, ஆர்.காவனூர் ஆகிய கிராமங்களில் நடத்தப்பட்ட காய்ச்சல் பரிசோதனை முகாம்களை ஆய்வு செய்தார்கள். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்கள் தவறாமல் தடுப்பூசி எடுத்துக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் கொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் பார்வையிட்டார்கள். பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்ற நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்கள்.

Updated On: 10 May 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?