/* */

இராமநாதபுரம்: பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஹபீப் குண்டர் சட்டத்தில் கைது

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஹபீப் குண்டர் சட்டத்தில் கைது.

HIGHLIGHTS

இராமநாதபுரம்: பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஹபீப் குண்டர் சட்டத்தில் கைது
X

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஹபீப்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளியான பள்ளிவாசல் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்து 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் ஹபீப் என்பவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பள்ளியில் படிக்கும் மாணவிகளின் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு, அவர்களது வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் புத்தகத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வருமாறு கூறுவதோடு, வர மறுத்தால் மார்க் குறைவாக போட்டு பெயிலாக்கி விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுபோல பல மாணவிகள் தனது வீட்டிற்கு புத்தகத்துடன் வந்ததாகவும், அதுபோல் நீயும் வரவேண்டு மென்று ஒரு மாணவியுடன் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

இந்த பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அலைபேசியில் ஆபாசமாக பேசிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ஹபீப் மீது முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் ஆசிரியர் ஹபீப்பை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பரிந்துறையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து ஆசிரியர் ஹபீப் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 15 July 2021 1:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  2. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  3. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  4. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  5. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  6. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  7. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  8. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  9. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  10. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய