/* */

புதுக்கோட்டை உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்: ஆட்சியர் வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர கவிதா ராமு வெளியிட்டார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்: ஆட்சியர் வெளியீடு
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர கவிதா ராமு வெளியிட்டார்.

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிகளில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 307 வாக்காளர்கள் உள்ளனர். 8 பேரூராட்சிகளின் 77566 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர உள்ளது இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதேவேளையில் அரசியல் கட்சிகளும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள்காண வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டார். இதில் புதுக்கோட்டை நகராட்சியில் 60,668 ஆண் வாக்காளர்களும் 64,984 பெண் வாக்காளர்களும் 17 இதர வாக்காளர்கள் என ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 669 வாக்காளர்கள் உள்ளனர். அறந்தாங்கி நகராட்சியில் 16573 வாக்காளர்களும் 965 வாக்காளர்கள் 34 ஆயிரத்து 638 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தமாக இரண்டு நகராட்சிகளிலும் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 307 வாக்காளர்கள் உள்ளனர். ஆலங்குடி அன்னவாசல் அரிமளம் இலுப்பூர் கறம்பக்குடி கீரமங்கலம் கீரனூர் பொன்னமரவாதி என 8 பேரூராட்சிகளில் 38,036 ஆனால் வாக்காளர்கள் 38,527 பெண் வாக்காளர்கள் 3 இதர வாக்காளர்கள் என 77566 மொத்த வாக்காளர்கள் உள்ளனர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஆட்சியர் கவிதா ராமு; மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 8 பேர் காட்சிகளுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் 8 பேர் காட்சிகளுக்கான தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று உள்ளது தேர்தல் அலுவலர்கள் துணைத் தேர்தல் அலுவலர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 280 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன இதில் 45 வாக்குசசாவடி மையங்கள் பதட்டமானது என்று கண்டறியப்பட்டுள்ளது தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Updated On: 9 Dec 2021 6:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...