/* */

விநாயகர்சதுர்த்தி விழாவில் சட்டம் , ஒழுங்கு பராமரிப்பு: கலெக்டர் ஆலோசனை

சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடலாம்

HIGHLIGHTS

விநாயகர்சதுர்த்தி விழாவில் சட்டம் , ஒழுங்கு பராமரிப்பு: கலெக்டர் ஆலோசனை
X

விநாயகர் சதுர்த்தி விழா குறித்து சட்டம் ஒழுங்கு பராமரிப்பு முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டத்தில்விநாயகர் சதுர்த்தி விழா குறித்து சட்டம், ஒழுங்கு பராமரிப்பு தொடர்பாக முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பேசியதாவது: கொரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் வருகின்ற 10.09.2021 அன்று விநாயகர் சதுர்த்தி விழாவை அவரவர் வீட்டிலேயே கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போதுள்ள கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சமய விழாக்களை முன்னிட்டு மதசார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுதல் அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அரசால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதே போன்று சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை. எனவே, இச்சமய விழாக்களைப் பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனிநபர்கள், அவர்களது இல்லங்களில் விநாயாகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதி தனிநபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகள் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடை செய்யப்படுகிறது.

தனிநபர்கள், தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்த சிலைகளை, ஆலயங்களில் வெளிப்புறத்திலோ அல்லது சுற்றுப்புறத்திலோ வைத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பின்னர், இச்சிலைகளை முறையாக அகற்றுவதற்கு, இந்து சமய அறநிலையத்துறையால், தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியினைக் கடைப்பிடித்தல் மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேற்குறிப்பிட்டுள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதி தனிநபர்களுக்கு மட்டுமெ பொருந்தும் என்பதால், மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை எவ்வகையிலேனும் மீறுபவர்கள் மீது, சட்டபூர்வமான தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்விழாவிற்கான பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்குச் செல்லும் பொதுமக்கள், தவறாது முகக்கவசம் அணிவதோடு பொருட்கள் வாங்க நிற்கும் போது ,சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் .

சிறிய திருக்கோவில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கெனவே அனுமதி அளித்துள்ள நிலையில், அத்தகைய திருக்கோவில்களில் வழிபாடு செய்யும் போது, அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பொதுமக்களும், திருக்கோவில் நிர்வாகமும் கடைபிடிக்கவேண்டும். மேலும் அவ்வாறு வழிபாட்டுத் தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.விநாயாகர் சதுர்த்தி விழா கொண்டாடுதல் குறித்து வருவாய் கோட்ட அலுவலர்கள் சம்மந்தப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர், வட்டாட்சியர்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளுடன் அறிவுரை கூட்டம் நடத்திடவும், இவ்விழா தொடர்பாக எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படா வண்ணம் உரிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) கருணாகரன், வருவாய் கோட்டாட்சியர்கள் தண்டாயுதபாணி, சொர்ணராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 4 Sep 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்