/* */

'பஸ் ஸ்டாண்ட்' இனி காய்கறி மார்க்கெட்

புதுக்கோட்டையில் பேருந்து நிலையத்தில் காய்யகறி மார்க்கெட் செயல்பட உள்ளது.

HIGHLIGHTS

பஸ் ஸ்டாண்ட்  இனி காய்கறி மார்க்கெட்
X

கொரோன பரவலை தடுக்கும் விதமாகவும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி திங்கட்கிழமை முதல் புதிய பேருந்து நிலையத்தில் காய்கனி மார்க்கெட் நடைபெறும் என புதுக்கோட்டை காய்கனி வியாபாரிகள் நல சங்கத்தில் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை அம்மன் சன்னதி, அனுமார் கோவில் சந்து, உள்ளிட்ட பகுதிகளில் காய்கனி கடைகள் நடைபெற்று வந்தது இந்நிலையில் அப்பகுதிகளில் பொதுமக்கள் அளவுக்கதிகமாக கூடுவதால் கொரோனா பரவல் அளவுக்கதிகமாக பரவும் என்ற அச்சம்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் கடைகளில் அளவுக்கதிகமாக கூட்டத்தை சேர்க்கக்கூடாது என்றும் சமூக இடைவெளியை பின்பற்றி வியாபாரம் செய்ய வேண்டுமென மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டது

இதனை அடுத்து காய்கனி வியாபாரிகள் நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி காய்களை விற்பனை செய்வதற்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்

இதனையடுத்து இக்கூட்டத்திற்கு வந்த நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சமூக இடைவெளியை பின்பற்றி வியாபாரம் செய்வதற்கு அனுமதி தருவதாகவும் கட்டுப்பாடுகளை மீறி வியாபாரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் அமைப்பதற்கான போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் எனவும் நகராட்சி ஆணையர் காய்கனி வியாபாரிகளிடம் எடுத்துக்கூறினார்

இதனையடுத்து காய்கனி வியாபாரிகள் சங்கத்தினர் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் கூறியதுபோல் கட்டுப்பாடுகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி புதிய பேருந்து நிலையத்தில் திங்கட்கிழமை முதல் காய்கனி வியாபாரம் செய்யப்படும் என்றும் மேலும் கட்டுப்பாடுகளை மீறி வியாபாரம் செய்பவர்கள் மீது சங்க ரீதியாகவும் கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என்றும் புதுக்கோட்டை காய்கறி வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பில் தெரிவித்தனர்.

#தமிழ்நாடு #புதுக்கோட்டை #காய்கறி #மார்க்கெட் #Insta News #TamilNadu #Pudukottai #Vegetable #Market #இன்ஸ்டாநியுஸ் #busstand #Coronaawareness #safetymeasures #safety #CoronaSpread #Corona2ndWave #covid-19 #quarantine #stayhome #staysafe #shops #sale #resellers #marketers #socialdistance

Updated On: 15 May 2021 11:07 AM GMT

Related News