/* */

போக்சோ சட்டத்தின் கீழ் 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை

இரு வெவ்வேறு வழக்குகளில் போக்சோ சட்டத்தின் கீழ் இரண்டு வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம்

HIGHLIGHTS

போக்சோ சட்டத்தின் கீழ் 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
X

புதுக்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர் பக்கத்து வீட்டு பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து உள்ளார். அந்த மாணவி கர்ப்பமாகவே, கர்ப்பத்தை கலைக்க மீண்டும் மாத்திரை கொடுத்துள்ளார். அதனால் அந்த மாணவி உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இந் நிலையில் அவரது பெற்றோர்கள் சுரேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் செய்தனர்

காவல்துறையினர் சுரேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று வந்தபோது சுரேஷ் பத்தாம் வகுப்பு மாணவிக்கு செய்த வன்கொடுமை உறுதியானது. எனவே, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், மாணவிக்கு கருக்கலைப்பு செய்ததற்கு மூன்று வருடம் சிறை தண்டனை மற்றும் 50,000 அபராதம் மேலும் கொலை மிரட்டலுக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை 20000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், வன்கொடுமை செய்ததில் அந்த மாணவிக்கு இழப்பீடு தொகை 5 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அடுத்து தையல் தொழில் கற்றுத் தருவதாக கூறி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ராஜீவ் காந்தி என்பவருக்கு ஆயுள் தண்டனையும் 7 வருடம் கடுங்காவல் தண்டனையும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இரண்டு வாலிபர்களுக்கு மகிளா நீதிமன்றத்தில் போக்சோ சட்டத்தில் இரண்டு வாலிபர்களுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளிதிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Updated On: 5 May 2021 10:15 AM GMT

Related News