/* */

தொழிலதிபரை கடத்திய கும்பலை பிடித்த போலீஸாருக்கு காவல்துறை துணைத்தலைவர் பாராட்டு

Trichy Range DIG and pudukkottai SP praise the police

HIGHLIGHTS

தொழிலதிபரை கடத்திய கும்பலை பிடித்த போலீஸாருக்கு காவல்துறை துணைத்தலைவர் பாராட்டு
X

திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டகாவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

கீரனூர் அருகே தொழிலதிபரை ரூ.70 லட்சம் பணம் கேட்டு கடத்திய கும்பலை 6 மணி நேரத்தில் கூண்டோடு கைது செய்து தொழில் அதிபரை பத்திரமாக மீட்ட புதுக்கோட்டை காவல் துறையினரை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் பாராட்டி சான்றிதழ் அளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் சரகம், வடக்குரத வீதியில் வசித்து வரும் பழனியாண்டி பிள்ளையின் மகன் சந்திரசேகரன்(67) என்பவர் CRK டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் தொழில் நடத்தி வருகிறார்.கடந்த 02.07.2022-ஆம் தேதி காலை 05.05 மணிக்கு சந்திரசேகரன் கீரனூர் வழி குண்றாண்டார்கோவில் சாலையில் நாஞ்சுர் விலக்கு பிரிவு ரோடு அருகே நடைப்பயிற்சி சென்றபோது, காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று விட்டதாக அவரது மகன் மணிகண்டன் என்பவர் கீரனூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்கவும் கடத்தப்பட்ட நபரை மீட்கும் வகையில், புதுக்கோட்டை மாவட்டகாவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடிவந்தனர். இந்நிலையில், தொழில் அதிபர் சந்திரசேகரனை கடத்திய நபர்கள் புகார் தாரரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு ரூ.70 லட்சம் பணம் கேட்டதன் அடிப்படையில், குற்றவாளிகளை தேடிச் சென்றதில் சூரியூர் அருகே கடத்தப்பட்டவரை இறக்கி விட்டு விட்டு மர்ம கும்பல் தப்பியோடியது. மேற்படி கடத்தப்பட்டவர் நல்ல நிலையில் மீட்கப்பட்டு, தப்பியோடிய7 பேரை 6 மணிநேரத்திற்குள் துரிதமாக தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

இவ்வழக்கின் குற்றவாளிகளை துரித நடவடிக்கை மூலம் கைது செய்த தனிப்படையைச் சேர்ந்த கீரனூர் உட்கோட்டகாவல் துணைக் கண்காணிப்பாளர் சிவசுப்பிரமணியன், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோரை திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டகாவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

Updated On: 5 July 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!