/* */

மாவட்டத்தில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் 95% தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

மாவட்டத்தில் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாததோர் 95 சதவீதம் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக சிஇஓ தெரிவித்தார்

HIGHLIGHTS

மாவட்டத்தில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர்  95%  தடுப்பூசி போட்டுக் கொண்டனர்
X

 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி 

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாத பணியாளர்களை 95% பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும், வரும் 31-ஆம் தேதிக்குள் 100% தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என்றார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருட காலங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது மாநிலத்தில் கொரோனா தோற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1 -ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், அதற்குண்டான வழிகாட்டு நெறிமுறைகளையம் அரசு வெளியிட்டுள்ளது

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும். அவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால், அவர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்க கூடாது என்றும் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 100% தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பணியாற்றும் 8600 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 95% பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு விட்டனர்.

தொடர்ந்து, தடுப்பூசி போடாதவர்கள் கண்டறிந்து, அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கல்வித் துறை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. வரும் 31ம் தேதிக்குள் 100% தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் இருக்கும். தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி அடிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டு விதி முறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி.


Updated On: 28 Aug 2021 10:37 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...