/* */

காவிரி குண்டாறு திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்: மக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை அருகே காவிரி குண்டாறு திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

HIGHLIGHTS

காவிரி குண்டாறு திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்: மக்கள் கோரிக்கை
X

புதுக்கோட்டை 9Aநத்தம்பண்ணை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை அளவிட வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது

புதுக்கோட்டை அருகே காவிரி குண்டாறு திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் 9A நத்தம்பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட பாலன் நகர் மேற்கு பகுதியில் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு செயல்படுத்த உள்ள காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் இந்தப் பகுதியின் வழியாக செயல்படுத்த உள்ளதாகவும், அவ்வாறு செயல்படுத்தப்படும் போது 700க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி அப்பகுதி கடந்த 18ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒப்பாரி வைத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பின்பு மாவட்ட ஆட்சியரை சந்தித்த அப்பகுதி மக்கள் இப்பிரச்னை குறித்து புகார் மனு அளித்திருந்தனர். இதனிடை யே இன்று காவிரி குண்டாறு திட்ட தனி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையிலான வருவாய்த்துறையினர் பாலன் நகர் மேற்கு பகுதியில் நில அளவீடு செய்ய வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் அதிகாரிகளை சூழ்ந்துகொண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து அங்கு வந்த திருக்கோகர்ணம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் தங்கள் பகுதியில் காவிரி குண்டாறு திட்டம் வருவதால் 700க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே அந்த திட்டத்தை மாற்று வழியில்செயல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். மேலும் தடையை மீறி அந்த பகுதியில் காவிரி குண்டாறு திட்டத்தை செயல்படுத்தினால் விஷமருந்தி அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

Updated On: 23 Feb 2022 9:48 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!