/* */

சிறைக் கைதிகளுக்கு புத்தகங்களைப் பரிசளித்த விழியிழந்தோர் பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை சிறைக் கைதிகளுக்கு புத்தகங்களைப் பரிசளித்த விழியிழந்தோருக் கான அரசுப்பள்ளி மாணவர்கள்.

HIGHLIGHTS

சிறைக் கைதிகளுக்கு புத்தகங்களைப் பரிசளித்த விழியிழந்தோர் பள்ளி மாணவர்கள்
X

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா உள்ள சிறைத்துறை அரங்கில் புத்தகம் வழங்கிய அரசு விழியிழந்தோர் பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் 7 ஆவது நாள் நிகழ்வில் சிறைக் கைதிகளுக்கு புத்தகங்களைப் பரிசளித்த பார்வையை இழந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் செயல் அனைவரையும் நெகிழ வைத்தது.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கு செல்ல வேண்டும் என்று ஆசிரியர்களிடம் தங்கள் ஆசையை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து பார்வைத்திறன் குறையுடைய 20 மாணவர்களை விழாக்குழுவினர் புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வந்தனர். அவர்களுடன் தலைமை ஆசிரியர் வடிவேலன் மற்றும் பணியாளர்கள் வந்திருந்தனர்.புத்தகத் திருவிழாவிற்கு வந்த அவர்களை இதரப் பள்ளிகளில் இருந்து வருகை தந்த மாணவ, மாணவிகள் இருபுறங்களிலும் நின்று கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம்மூர்த்தி, அ.மணவாளன், கவிஞர் ஜீவி, எம்.வீரமுத்து, மு.முத்துக்குமார், ஸ்டாலின் சரவணன், பவுனம்மாள், கீதா உள்ளிட்டோர் அவர்களை வரவேற்று அழைத்து வந்தனர்.

சிறைக் கைதிகளுக்கு புத்தகங்கள் வழங்கிய மாணவர்கள்:

புத்தக அரங்கத்திற்குள் சென்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் புத்தகங்களைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தனர். மேலும், சிறைக் கைதிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் அரங்கிற்கு வந்த அவர்கள் பல்வேறு தலைப்பிலான புத்தகங்களை வாங்கி பரிசளித்தனர்.இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், நாங்கள் வரும்போது எங்களை பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் கைதட்டி வரவேற்பளித்தது மிகுந்த உற்சாகமடைந்தோம். இங்குள்ள புத்தகங்களை எங்களால் வாசிக்க முடியாது.

எங்களால் பிரெய்லி வடிவிலான எழுத்துகளை மட்டுமே வாசிக்க முடியும். ஆகவே, நாங்கள் சிறைக் கைதிகளுக்கு புத்தகங்களை வாங்கி அனுப்பி உள்ளோம். இந்தப் புத்தகங்களை படித்து அவர்கள் நேர்மையான பண்புகளை வளர்த்து இந்த சமுதாயத்தில் வாழவேண்டும் என்பதற்காக இதை நாங்கள் செய்கிறோம் என்றனர்.

Updated On: 4 Aug 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...